Advertisement

கொடி அணிவகுப்பு! வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார்... கடலூர் மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை

கடலுார்:கடலுார் லோக்சபா தொகுதியில், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதற்காக, துணை ராணுவப்படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
கடலுார் மாவட்டத்திலுள்ள கடலுார், சிதம்பரம் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் கடலுார் லோக்சபா தொகுதியில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், விருத்தாச்சலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இதேபோல், சிதம்பரம் லோக்சபா தொகுதியில், கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி ஆகிய சட்டசபை தொகுதிகளும், அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டமும், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் சட்டசபை தொகுதியும் உள்ளன. கடலுார் மாவட்டத்தை பொறுத்த வரை 9 சட்டசபை தொகுதிகளில், தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக, உளவுத்துறை அறிவித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 300 ஓட்டுச்சாவடிகளில், 163 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான என கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 4 ஓட்டுச்சாவடிகள் மிகுந்த பதட்டம் நிறைந்தவைகளாக கணக்கிடப்பட்டுள்ளன. தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தேர்தலின் போது மோதல் ஏற்பட்டால், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துவிடும். இதை கருத்தில் கொண்டு, கடலுார் மாவட்டத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவிற்கு எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்திரவின் பேரில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் தேர்தல் அமைதியாகவும், பதட்டம் இல்லாமல் நடைபெறுவதற்காக, 2,300 போலீசாரும், நான்கு கம்பெனி துணை ராணுவத்தினர் (326 பேர்), நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீசார் (டி.எஸ்.பி.,) மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பதட்டம் நிறைந்த சட்டசபை தொகுதிகள், பதட்டமான ஓட்டுச்சாவடிகள் ஆகிய இடங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தி, வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதற்கு, கடலுார் எஸ்.பி.,சரவணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று காலை கடலுாரில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. மஞ்சக்குப்பம் மைதானத்திலிருந்து எஸ்.பி.,சரவணன் தலைமையில் புறப்பட்ட கொடி அணிவகுப்பு பேரணியில், துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு போலீசார் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான போலீசார் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த கொடி அணிவகுப்பு, கடலுார் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதே போல் சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஆப்பு -

    ஓட்டளிப்பதில் அச்சமே இல்லை. ஜெயிச்சு வர்ரவங்க எல்லோருமே உருவிடுவாங்களே...அதை நினைச்சாத்தான் பயமே....

  • ஆப்பு -

    ஓட்டளிப்பதில் அச்சமே இல்லை. ஜெயிச்சு வர்ரவங்க எல்லோருமே உருவிடுவாங்களே...அதை நினைச்சாத்தான் பயமே....

Advertisement