Advertisement

'மாண்புமிகு எருமை மாடுகள் என்னை மன்னிக்க வேண்டும்!'

சென்னை : கமல், தன் கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்தபோது, 'மாண்புமிகு எருமை மாடுகள், என்னை மன்னிக்க வேண்டும்' என்று பேசி, சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சென்னை, செங்குன்றத்தில், நேற்று பகல், 11:30 மணி அளவில், மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் பிரசாரம் நடந்தது. அதில், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அக்கட்சி வேட்பாளர் லோகரங்கனுக்கு ஓட்டு கேட்டு, நடிகர் கமல் பேசியதாவது:

'எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் சேரும்; நடிகனுக்கும் அப்படித் தான் கூட்டம் சேரும்' என்கின்றனர். நீங்களும், நடிகனை வைத்து தான், கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். குளிப்பாட்ட வேண்டிய எருமை மாடுகள், எங்கேயோ உள்ளன. அவர்களை, நீங்கள் கண்டிப்பாக குளிப்பாட்டியே தீர வேண்டும். நான், யாரையும் அப்படி சொல்லவில்லை. எனக்கு எருமை மாடுகள் மீது, மிகுந்த மரியாதை உண்டு. அதனால், மாண்புமிகு எருமை மாடுகள், என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில், அவை பால் தரும்; சாணமிடும். அவற்றால், மக்களுக்கு ஏதாவது பலன் உண்டு. அதனால், அவற்றிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

நான், கோபத்தில் தான் அரசியலுக்கு வந்தேன். மக்களுக்காக, ஏதாவது செய்து, மடிந்தவர்கள் கூட்டத்தில் ஒருவனாக, உங்கள் மனங்களில் வாழ ஆசைப்படுகிறேன்.அதற்கான போராட்டத்தில், என் தொழிலோ, பணமோ, எனக்கு பெரிதாக தெரியவில்லை. நான், அரசியலுக்கு காலதாமதமாக வந்தது தான் எனக்கு வருத்தம்.

இன்னும், சீக்கிரமாக வந்திருக்க வேண்டும். பரவாயில்லை, இனி விட்டதை பிடிக்க, வேகமாக வேலை செய்வேன். என் வாழ்நாளை, உங்களுக்காக ஒதுக்கி விட்டேன்.இங்கு, 50 ஆண்டாக ஆட்சி செய்தவர்கள், அவர்களது குடும்பங்களுக்காக மட்டும் உழைத்தனர். இப்போது, ஒருத்தர் போட்டு வைத்த, இரட்டை இலையில், வேறு இருவர் சாப்பிடுகின்றனர். அதுவும், அவர்களின் குடும்பங்களுக்காக என்றாகி விட்டது.இந்த குறைகளை, உடனே தீர்த்து விட முடியாது. ஆனால், என்றாவது ஒரு நாள் தீரும். இவ்வாறு, கமல் பேசினார்.
விபத்து: பிரசாரத்தின் போது, கூட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டியால், சிறு விபத்து ஏற்பட்டது. அப்போது, அதை பற்றி விசாரித்த, கமல் பேசியதாவது:நான், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி தான், கூட்டங்களை நடத்த வேண்டும் என, கருதுகிறேன். ஆனால், கூட்டம் சேராத இடம், முட்டு சந்து, வெயில் நேரம் என, ஏதாவது ஒரு வகையில், எனக்கு இடையூறு தரும் வகையில் தான், அனுமதி வழங்கப்படுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு விபத்துக்காக, போலீசாரிடம் மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  முதலில் சொந்த வாழ்வில் இழைத்த தவறுகளைச் சரிசெய்யவேண்டும். அப்படிச் சரிசெய்ய முடியாவிட்டால், அரசியலுக்கு வந்தது தப்பு. இப்படியான சூழ்நிலையில் எருமை மாட்டுப் புத்திதான் குடிகொள்ளும். அப்படிக் கொண்டால், எருமைகள் என்ற பதம்தான் பேச்சில் இருக்கும். எருமையை பற்றித் தெரிந்தவன் தன்னில் எருமைத்தனம் இருப்பதை உணரமாட்டான். எனவே அறிவு = (6 - 1) = 5 ஆகும்.

 • Jai Hinth - chennai,இந்தியா

  கமல்சார் உங்க பாசையில் சொல்லப்போனால் செவிடான்காதில் சங்கு ஊதுவது போல் . எல்லாருக்கும் ஸ்பீக்கர் அவுட். ஆனால் இளைஞர்கள் உங்களை வரவேற்கிறார்கள் . அவர்களுக்காக நீங்கள் பேசலாம் . +2 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்து சொன்னீர்கள் அது உங்கள் அனுபவத்தை காட்டுகிறது

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆமாம் கமல் அந்தகாலத்துலே தேர்முட்டிலே தேரோடும் வீதிலேயே கூட மீட்டிங் பேசுவாங்களே அன்று இவ்ளோ வாகனங்கள் இல்லே என்பது உண்மை குதிரை வண்டிகள் RIKSHAA க்கள் இருந்தன, ஆனால் இன்று எவனும் கார் வச்சுண்டு சொய்ங்சொய்ங்ன்னு போறாங்க 2 வீலர்காரனுகளோ கேக்கவே வேண்டாம் 10 வயசுலேந்து ஒட்டுதுங்க வண்டி ஓட்டத் தெரியாதவா தான் லூசு என்று ஆயிட்டுது கோயில் பிரகாரம் க்கு வெளியே இருக்கும் சந்துகளிலேயும் மீட்டிங் நடத்தலாம்

 • Manian - Chennai,இந்தியா

  அதெல்லாம் சரி கமல் சார். எருமைகள் குளிக்க தண்ணீர் வேண்டுமே. குளம், ஏரிகளை உங்கள் கழக தொண்டர்கள் மூலம் தூர்வாரி இருந்தா தான் இதை சொல்ல முடியும்.

 • oce - chennai,இந்தியா

  இவர்களை போன்றோர் நம்மை தான் மடையர்களாக்கி விடுவர். அவர்களுக்கு ஒன்றும் இல்லை. இவர்கள் பேச்சை கேட்கும் நம் நிலைமை தான் பரிதாபம்.

Advertisement