Advertisement

இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி; முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை

சேலம்: ''லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை இடைத்தேர்தலிலும், 100 சதவீதம் வெற்றி பெறுவோம்,'' என, முதல்வர், பழனிசாமி பேசினார்.

சேலத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், முதல்வர், பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில், பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், அ.தி.மு.க., என்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என, கேள்வி எழுப்பினார். அதற்கு, சேலத்தில் உயர்ந்து நிற்கும் பாலங்களே சாட்சி. உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, பல பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

சேலத்தில், ராணுவத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சென்னை அருகே, 2,000 கோடி ரூபாயில், உணவு பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. என் அரசியல் வாழ்க்கை தேர்தலோடு கிழிந்துவிடும் என, ஸ்டாலின் பேசுகிறார். தேர்தலுக்கு பின்தான், என் அரசியல் வாழ்க்கை தொடங்கும்.

ஸ்டாலின் செல்லும் இடங்களில் மட்டுமின்றி, எப்போதும் முதல்வர் கனவிலேயே உள்ளார். அந்த நாற்காலி, எப்போதும் அவருக்கு கிடைக்காது. அவரது முதல்வர் கனவு பலிக்காது. லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, சட்டசபை இடைத்தேர்தலிலும், 100 சதவீதம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இந்த மாவட்டத்துக்கு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பல வளர்ச்சி திட்டங்களை, முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு, இரவு, பகலாக உழைக்கிறார். மத்தியில், இரண்டாவது முறையாக, மோடி ஆட்சி அமைப்பது உறுதி. இடைத்தேர்தலில், 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. 1949ல் உருவாக்கப்பட்ட, தி.மு.க., இன்று, ஸ்டாலினால் முற்றுப்பெறும் நிலையை எட்டி விட்டது. தேர்தலுக்கு பின், அக்கட்சி, முற்றுப்பெற்று விடும். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  உங்களுக்கு 0000% வெற்றிமட்டுமே நிச்சயம் ..

 • PANDA PANDI - Aththipatti,இந்தியா

  வெற்றி வெற்றி 100 சதவிகிதம். ஆமா யாருக்கு வெற்றி தெரியவில்லையே

 • நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா

  ஸ்டாலின் போல மேடை அமைத்து பழமொழிகள் பூனை எடுத்துக்காட்டுகள், அந்தரங்க உவமைகள், பிரதமர்,ஜப்பான் துணை முதல்வர் போல எடப்பாடி தமிழனுக்கு காமெடி செய்ய தெரியவில்லையே........என்ன செய்ய

 • Nepolian S -

  நீங்க உங்க டாடியோட வேறு வழியின்றி கூட்டணி வைத்தீர்கள் ... அதனால்தான் மக்களும் வேறுவழியின்றி திமுகவுக்கு ஓட்டு போட போறாங்க நீங்க அந்த தகாத கூட்டணி வைக்காமல் இருந்து இருந்தால் ஏதோ ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு இடைத்தேர்தலில் முட்டி மோதி பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது 100க்கு 0 தான் ...

 • Nepolian S -

  ஐயா எடபாடி..அவர்களே.. ஓபிஎஸ் ஏன் அடக்கி வாசிக்கிறாருன்னு தெரியலையா... ஓட்டுக்கு 2000கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு ஓட்டு என்னமோ திமுகவுக்கு தான் ... காரணம் ..தமிழக மக்களுக்கு தற்போது அக்கரைபச்சயாக காட்சியளிக்கிறது .... வேறு வழியும் இல்லை .. தமிழகத்தில் முக்கோண அரசியல் இல்லை... தேர்தல் முடிந்தவுடன் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகநேரிடும்...எதை வைத்து இவ்வளவு நம்பிக்கையில் வார்த்தை போர் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை... பார்க்கலாம்

Advertisement