Advertisement

காட்பாடியில் கைப்பற்றிய பணம்; ஸ்டாலின் சொல்கிறார் புது கதை

குடியாத்தம்: ''எங்கேயோ இருந்து, அவர்களே பணத்தை கொண்டு வந்து வைத்து, வேண்டுமன்றே ஒரு நாடகத்தை நடத்தி, வேலுாரில், தி.மு.க.,வின் வெற்றியை தடுத்து நிறுத்த நினைக்கின்றனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த், குடியாத்தம் தனி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து, குடியாத்தத்தில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.

இதில், ஸ்டாலின் பேசியதாவது: இடைத்தேர்தல் நடக்க உள்ள, 22 சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றால், நம் பலம், 119 ஆக உயரும். ஆட்சிக்கு வர, 117 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும். இதனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஐண்டு ஆண்டுகளில், எதுவும் செய்யவில்லை. ராமதாஸ், 10 தலைமுறைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாத அளவுக்கு பணம் பெற்று, கூட்டணி அமைத்துள்ளார்.

வேலுார் தொகுதியில், எப்படியாவது தேர்தலை நிறுத்த நினைத்து, பல திட்டங்களை தீட்டினர். துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதை எல்லாம் பார்த்து பயப்படுபவர்கள், தி.மு.க.,வினர் அல்ல. எங்கேயோ இருந்து, கொண்டு வரப்பட்ட பணத்தை, அவர்களே கொண்டு வந்து வைத்து, வேண்டுமன்றே ஒரு நாடகத்தை நடத்தி வேலுாரில், தி.மு.க.,வின் வெற்றியை தடுத்து நிறுத்த நினைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (75)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஆனால், 2G யில் இவர்கள் உத்தமர்கள். ஒன்றுமே செய்யவில்லை. இவர்கள் உண்மையே பேசுபவர்கள். சொல்வதை நம்பவேண்டும்.

  • narayanan iyer - chennai,இந்தியா

    துரைமுருகன் சொல்வது உண்மை . அந்தப்பணம் துரைமுருகனுடையது இல்லை. துரைமுருகன் தி மு க வின் பொருளாளர் .தி மு க வின் பணம்தான் அது . எங்கே தி மு க வின் பணம் என்று சொன்னால் ஏன் எடுத்தாய் என்று பொதுக்குழுவில் கேள்வி வருமே .பொதுக்குழுவில் கேட்டால் பதில் சொல்லமுடியுமா ?

  • Tamilnesan - Muscat,ஓமன்

    தகர பெட்டியுடன் சென்னைக்கு வந்ததாக கூறும் துரைமுருகன் குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கான ரூபாய் எங்கிருந்து வந்தது. இதுகுறித்து மக்களுக்கு அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாயை திறக்க மறுப்பது ஏன்?

  • Jaya Ram - madurai,இந்தியா

    சூப்பர் விளக்கம் என்ன இருந்தாலும் தளபதி அல்லவே தன்னுடைய ஆட்களை காப்பாற்ற வேண்டாமா அப்புறம் துறை இதைக்கூட சொல்லலைனா வருத்தப்பட மாட்டார் அவரும் அன்பழகன் தயவும் இல்லையென்றால் அழகிரியினை கட்சியில் இருந்து ஓரம் கட்டமுடியுமா அதன் விசுவாசமே இது

  • madhavan rajan - trichy,இந்தியா

    எங்கேயாயிருந்து பணத்து கொண்டுவந்து உங்கள் இடத்தில் வேறொருவர் வைக்கும் வரை உங்கள் கட்சி ஆட்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதுபோல வைத்த பணம் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது என்று உடனே கணக்கு பார்க்கவும். அதுபோல வேறொருவர் கொண்டுவந்து வைத்த பணம் என்றால் அவை என்னுடையது இல்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும். செய்தாரா உங்கள் பொருளாளர்?

Advertisement