Advertisement

ஓட்டு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சியினர் மாய்மாலம்!

லோக்சபா தேர்தல் நடைமுறைகள் துவங்கி, முதல் கட்டமாக, 91 தொகுதிகளுக்கு தேர்தலே நடந்து முடிந்து விட்ட நிலையில், ஓட்டு இயந்திரம் குறித்து, எதிர்க்கட்சியினருக்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. ஓட்டு இயந்திரம் தவறாக பயன்படுத்துவதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர், நேற்று, டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த, 11ல், நடந்த முதல் கட்டத் தேர்தலின்போது, ஆந்திராவில் பல்வேறு இடங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என, புகார் எழுந்தது. இதனால், 150 ஓட்டுச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்தும்படி, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, அவர் புகார் கொடுத்தார். அப்போது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ஒரு குழுவை, அவர் அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் புகாருக்கு, தேர்தல் ஆணையம் பதில் அளித்தது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பாக விவாதிக்க, உங்கள் கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை உள்ளதை நிரூபிக்கும் நிபுணர்களை அழைத்து வருவதாக கூறினீர்கள். ஆனால், ஹரிபிரசாத் என்பவரை, உடன் அழைத்து வந்தீர்கள். ஆனால், நீங்கள் எங்களுக்கு அளித்த பட்டியலில், அவரது பெயர் இல்லை.

கூட்டம்:



விசாரணை நடத்தியதில், 2010ல், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியதாக, ஹரிபிரசாத் மீது, மஹாராஷ்டிராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது போன்றவர்களை, விவாதத்துக்கு அழைத்து வந்தது ஏன்? மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விளக்கம் அளிக்க தயாராக இல்லை. வேறு நிபுணர்களை அழைத்து வரவும். இவ்வாறு, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது, சந்திரபாபு நாயுடுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள், 22 பேர் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், முதல் கட்டத் தேர்தலில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தோல்வி அடைந்து விட்டது. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கூட, ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்பி விட்டனர். நம் நாட்டிலும், ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற வேண்டிய காலம் வந்து விட்டது.

வழக்கு:



நானும் பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால், பிரச்னையை புரிந்து கொள்ளாத, பொறுப்பில்லாத, இதுபோன்ற ஒரு தேர்தல் ஆணையத்தை, இது வரை பார்த்ததில்லை. பா.ஜ.,வின் கிளை அலுவலமாக, தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுடன், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளை எண்ணி, ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

ஒரு சட்டசபை தொகுதியில், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், இவ்வாறு ஒப்பிட்டு, சரி பார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதல் கட்டத் தேர்தலில் நடந்துள்ள மோசடிகளை அடுத்து, 50 சதவீத ஓட்டு உறுதி சீட்டுகளை எண்ணி, சரி பார்க்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு பக்கம், ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியவனை, தேர்தல் ஆணையத்துக்கு அழைத்துச் சென்று, சந்திரபாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மற்றொரு பக்கம், ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, அவர் கூறிஉள்ளது, தேர்தலுக்காக அவர் நடத்தும் மாய்மாலமாகவே பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10 + 53)

  • adalarasan - chennai,இந்தியா

    இதே வோட்டு எந்திரம் மூலமாக நீங்க ,பல தேர்தல்களில் ஜெயித்தீர்களே?அது இப்படித்தானோ?இவர்களுக்கு பொருந்தும் இப்ப தோல்வி பயம் வந்திடுச்சு? தண்ணீல முழுகுகிறவன், எல்லோரையும் இழுத்து சென்றுவிடுவான்" என்ற பழமொழி,இவர்களுக்கு பொருந்தும் தேர்தலே நடத்த விடமாட்டாங்க போலிருக்குஒரே அலறல்…?

  • kandhan. - chennai,இந்தியா

  • bal - chennai,இந்தியா

    போட்டோவில் இருக்கும் மூவரும் திருடர்கள்...இருவர் சட்ட வல்லுநர்கள்...பொய் சொல்லி புழைப்பவர்கள்..ஒருவர் திருப்பதியில் திருடுபவர்....

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நாயுடு எல்லா MLA மற்றும் தெலுங்கு தேச அமைச்சர்களுக்கும் LAPTOP + MOBILE கொடுத்துள்ளார். அதையும் பறிமுதல் செய்து ஒரு சிலேட்டும் பலப்பமும் மட்டுமே தரவேண்டும் என்று வழக்கு போடுவேன்.

  • Sekar - beijing,சீனா

    நெதெர்லாந்திலும் ஜெர்மனியிலும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் ஓட்டு சாவடிகளை கைபபற்றுவதியிலை. ஆனால் நம் நாட்டில் நிலைமை வேறு.

சுப்ரீம் கோர்ட்டை நாட எதிர்க்கட்சிகள் முடிவு (50)

  • sripa - muscat,ஓமன்

    இந்த குற்றச்சாட்டை எதிர் காட்சிகள் வேண்டும் என்ற வைக்கிறது.ஏன் என்றல் அவர்கள் அனைவருக்கும் தெரியும் மோடிதான் மறுபடியும் பிரதமராக வருவார் என்று. அதனால் அவர்கள் தோல்வி அடைந்த பின்னர் அவர்களுக்கு ஒரு கரணம் வேண்டுமே? அதற்கான முன்னயேற்படு தான் இந்த நடவடிக்கை. இவர்கள் எல்லாம் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மோடி வெல்வதை ராலும் தடுக்க முடியாது. ஜெய் மோடி சர்க்கார்.

  • LAX - Trichy,இந்தியா

    எதுக்கும் கபில் சிபில் உதவியோடு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி கோர்ட்டுலயும் வழக்கு பதிவு செய்ய பேப்பர்ஸ் எல்லாம் ரெடியா வெச்சுக்குங்க.. எப்படியும் சுப்ரீம் கோர்ட் உங்க செல்லுபடியாகாத மனுவை தள்ளுபடி செய்யத்தான் போகுதுன்னு உங்க எல்லாத்துக்குமே தெரியும்.. தோல்விக்கப்புறம் சொல்றதுக்கு இப்பவே 'சாக்கு'களைத் தயாரா வெச்சுக்கணுமே அதான் indha நாடக ஒத்திகையெல்லாம்.. ம்.. நடத்துங்க.. நடத்துங்க..

  • balakrishnan - Mangaf,குவைத்

    இதில் இருக்கும் அனைவரும் திருட்டு கூட்டத்தை சேர்ந்தவர்கள் .

  • Suman - Mayiladuthurai ,இந்தியா

    மோடிக்கு எதிரா எல்லா ஏமாத்து பேர்வழியும் ஒரு புறமா ?

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    தோல்வி பயம் அதனால் சுப்ரீம் கோர்ட் .........செல்லுங்கள். தள்ளுபடிதான் உம் கோரிக்கை.

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    திருடனுக்கு திருட்டு புத்தி என்று ஏன் சொல்கிறார்கள். இந்திய நாட்டை பற்றி பேசுங்கள் நெதர்நாட்டை பற்றி பேசாதீர்கள். உங்க எண்ணம் பலிக்காது கோர்ட் கேசை தள்ளுபடி செய்யும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் நிரூபிக்க அழைத்த்தே அன்று போய் உங்கள் திறமையை காட்டி நிரூப்பிக்காமல் வெட்டி பேச்சு ஏன் பேசுகின்றீர்கள். இதுதான் கையாலாகாத தனம் என்பதோ???

  • kmathivanan - Trichy ,இந்தியா

    திருட்டு திமுக , காங்கிரஸ் தோல்வி உறுதியாகிவிட்டது . இன்னும் மக்களின் மனதில் சந்தேகத்தை விதைக்க காங்கிரஸ் மற்றும் சில தோல்வியாளர்கள் செய்யும் கடைசி சாத்தியமற்ற முயற்சி

  • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

    இன்று WIFI மாதிரியான நவீன தொழில் நுட்பம் இருக்கும் சூழலில் மின்னணு இயந்திரங்கள் நிச்சயம் பிரச்னைக்கு உரியவைதான். தேர்தல் கமிஷன் எல்லா இயந்திரங்களையும் பரிசோதிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. இந்த இயந்திரங்கள் ஆரம்ப காலத்தில் வந்தது போலவே இப்போதும் இல்லை. வேட்பாளர் பெயர்கள் மாற்றுவதுக்கும், ஒப்புகை சீட்டு தொழில் நுட்பத்தை சேர்க்க, கோளாறானவற்றை சரி செய்ய என பல முறை அதில் உள்ள பதிவுகள் மாற்றம் பெறுகின்றன. ஒரு தொத்திக்கு ஒன்று இரண்டு இயந்திரத்தை கைப்பற்றினால் முடிவுகள் மாறும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அப்படி இயந்திரம்தான் வேண்டும் என்றால் ஒப்புகை சீட்டுகளுக்கும் இயந்திரத்தின் வாக்குகளுக்கும் எண்ணப்படவேண்டும்.

  • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    UPA 1 UPA 2 karnataka ராஜஸ்தான் மத்தியபிரதேச சட்டிஸ்கர் பஞ்சாப் ஜெயிச்ச மாதிரி பேப்பர் ஓட்டு வேணும்.

  • HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா

    ஏம்பா நாய்டு நீ எப்படி ஜெயிச்ச..அப்போ இனித்ததா?

  • Ram Sekar - mumbai ,இந்தியா

    மாலிக் தம்பி, உன்ன மாதிரி அமைதி மார்க்கம் என்று சொல்லி உலகை ஏமாற்றும் கூட்டம் நினைப்பது கூட நிறைவேறாது போல இருக்கே

  • kskmet - bangalore,இந்தியா

    கருத்து கணிப்புக்குத்தான் தடை. இவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ஓலமிடுவதை பார்த்தால் பிஜேபி ஆதரவாளர்களை விட இவர்களுக்குத்தான் அசைக்க முடியாத நம்பிக்கை மீண்டும் மோடி என்பதில் என்று தெரிகின்றது. சிங்கம் தனியா நின்னு ஜெயிச்சுடும் போல இருக்கே.

    • Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ

      ஆமாம் ஆம்புலன்ஸ் போலீஸ் வாகனத்திலேயே பணம் கொண்டு போய் பட்டுவாடாவாம் இன்னும் ராணுவத்தை உபயோகப்படுத்தவில்லை இதெல்லாம் ஒரு பொழப்பு

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    இறுதி நம்பிக்கை

  • Visu Iyer - chennai,இந்தியா

    எந்த கட்சியால் பிரச்சனை என கண்டு அறிந்து அந்த கட்சியை இந்திய அரசியல் வரலாற்றில் இருந்து தடை செய்தால் மாற்றம் வரும்.. அத்துடன் இந்த கட்சியை சேர்ந்த யாரும் தனியாகவோ, வேறு கட்சியுடனோ தேர்தலில் போட்டியிட கூடாது என்றும் சட்டம் வந்தால் தான் தீர்வு கிடைக்கும்..

  • நக்கல் -

    எதிர்க்கட்சிகள் வெற்றி பெற எந்த பொய் வாக்குறுதி கொடுத்தாலும் மக்கள் நம்ப வில்லை.. அதனால் இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி எந்திரத்தை குறை சொல்லுவது... இப்போ எல்லா திருட்டு பசங்களும் ஒண்ணு சேருவாங்க... இந்த தேர்தலோட இந்த திருட்டு கும்பல் ஒழியட்டும்...

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    எசமான், எதிர் கட்சிங்க வாக்கு பொட்டிய தூக்கிட்டு ஓடி கள்ள ஒட்டு போட்டு ஆட்சிய புடிக்க வசதி பண்ணி கொடுங்க எசமான்.....

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    பிஜேபி நினைப்பது நிறைவேறுவது கடினம்தானோ ?

  • Suri - Chennai,இந்தியா

    பீ ஜெ பீ தேர்தல் கமிஷனுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சநதிக்கிறது. உச்சநீதிமன்றம் என்ன செய்துவிடும்? இங்கு நேரம் ரொம்ப முக்கியம். காலம் தாழ்த்தி எது செய்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

    • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

      2014 தேர்தலின் பொது காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது.அப்போதும் தேர்தல் ஆணையம் மோடியின் கண்ட்ரோலில்தான் இருந்ததா? ஆட தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம்.

  • siriyaar - avinashi,இந்தியா

    விசாரித்து முடியும் வரை தேர்தலை நிறுத்தி வைத்து வழக்கு முடியும் வரை மோடியை பிரதமராக தொடர அனுமதிக்க வேண்டும் யுவர்ஆனர். ராமர் கோவில் வழக்கு போல் வழக்கம் போல் உங்கள் வேகத்தில் விசாரிக்க வேண்டும் 2030 வரை பிரச்சினையில்லை.

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    வக்கிரம் பிடித்தவர்கள். இதுவரை இவர்கள் பணம் கொடுத்து தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆராயச்சொன்னவர்களும் கூறிவிட்டார்கள் மோடி தான் என்று. ஏற்கனவே மோடியின் பல திட்டங்களால் இவர்களின் டவுசர் கிழிந்து தொங்குகிறது. அதனால் இந்த தேர்தலில் கட்டாயம் இவர்கள் வெல்ல வேண்டும் என்கிற நிலைமை. இன்னும் ஐந்தாண்டு மோடி ஆட்சிக்கு வந்தால் இவர்களை போன்ற பச்சொந்திகளில் நிறம் மொத்தமாக வெளிறிவிடும் என்கிற பயம் தொற்றிக்கொண்டது. அதனால் எதை செய்தால் பித்தம் தெளியும் என்று இந்த நகரத்து நக்சல்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதியை கையில் எடுக்கின்றனர். என்னென்ன பசப்பு வார்த்தைகள் கூறுகிறார்கள். வெளிப்படை தன்மை வேணுமாம். முதலில் இவர்களின் கூட்டணிக்கு வெளிப்படதன்மையான காரணம் என்ன ? எவனும் முன்னூறு தொகுதிகளில் போட்டியிடவில்லை. பிறகு எதற்கு இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் ? இவர்களின் கிச்சடி அரசாங்கம் தேவை இல்லை. உங்களின் அட்டகாசத்தை நடத்துங்கள். கலக்கம் பிறந்தால் தான் மக்கள் இன்னும் உங்களின் பச்சோந்தி நடவடிக்கைகளை அறிந்து கொள்ள நன்கு வாய்ப்பு கிட்டும். உங்களை மக்கள் இப்போது ஓட ஓட விரட்டுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடத்தில் மக்கள் வரவில்லை என்பது தான் உண்மை. அதனால் தோல்வியின் விளிம்பில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த முறை மோடி கூட்டணி நானூறு பாராளுமன்ற உறுப்பினர்களை பெறப்போவது உறுதி. ஜெலுசில் வண்டி வண்டியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பேதியை தடுக்கும் மாத்திரையை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், உத்திர பிரதேசம், டில்லி, ஹரியானா, ஹிமாசலம், உத்தாரஞ்சல், சத்தீஸ்கட், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என்று எல்லாவற்றிலும் பிஜேபி தான். வேறு கட்சி இல்லை. உங்களின் பரப்புரை எல்லாம் மக்கள் ஏற்க்க தயாராக இல்லை. உங்கள் நாடக வேஷம் களைந்து விட்டது. நீங்கள் ஓய்வெடுக்க செல்லலாம். உங்களின் கட்சிகளை ஜூன் மாதம் கலைப்பதற்கு அல்லது ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒரே கட்சியாக மாறுவதற்கு தயாராக இருங்கள்.

  • GMM - KA,இந்தியா

    EVM வந்த பின் பல தேர்தல்கள் EVM மூலம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர் கட்சி உறுப்பினர்கள் வெற்றி அடைந்தவுடன் நீதிமன்றத்தை நாடி வழக்கு பதிவு செய்து இருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தாக்கல் செய்யலாம். தேர்தல் நடக்கும் போது மனுவை தாக்கல் செய்வதும் விசாரிப்பதும் சரியா? சரி தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்க வழக்கு தாக்கல் செய்து, பின் மெஷின் குறைபாடு விசாரணை. சரியா ?தவறா ? எதிகட்சிகளே.

  • karupanasamy - chennai,இந்தியா

    பாக்கி தேர்தலில் எலக்ட்ரோனிக் மெஷின் கிடையாதாம் சோனியாவையும் கூட்டிகிட்டு அங்க போய் நில்லுங்க, தலிபான், அல்குவைதா, ஐசிஸ், ஜிகாதி கூட்டம் மற்றும் தாவூது ஆதரவில் அன்ன போஸ்ட்டா ஜெயிச்சிடலாம்.

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

    ஆட தெரியாத கூத்தாடி மேடை கோணல் என்று சொன்னானாம். இவர்களின் படு தோல்விக்கு ஒரு காரணம் தயார்.

  • Prasad - London,யுனைடெட் கிங்டம்

    எதிர் கட்சிகள் தோல்வியை ஒப்பு கொண்டு விட்டார்கள் . அயோ பாவம்

  • RajanRajan - kerala,இந்தியா

    நாட்டை தூண்டாட எதிர்கட்சிகள் போடும் உச்ச கட்ட கபட நாடகம். இவனுக பயத்தில் ஆடும் கண்ணாம் பூச்சி ஆட்டம்.

  • Ganesan Madurai -

    நாரயணா நாங்க சங்கீன்னா நீ மங்கியாடா? லூசு மாதிரி கருத்து போடாதே. டேய்களா நீங்க ஜெயிக்கறமாதிரி இருந்தப்போ வாக்குசீட்டு முறை கேட்டீங்களா களவாணிகளா?

  • Ganesan Madurai -

    ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளில் எந்த அரசியல் கட்சிகளும் மொள்ளமாறித்தனமாக உங்களைப்போல வாக்காளர்களை வேட்பாளர்களை மிரட்டி வாக்குச்சாவடியை குண்டர்களுடன் கைப்பற்றி வாக்குசீட்டை கிழித்து அய்யோக்கியத்தனம் செய்ததில்லை. ஏன் மக்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் நீங்க எல்லாம் மக்களின் முடிவை கேட்கக்கூடாது? உங்களுக்கு வாக்குச்சாடியை கைப்பற்றி முன் ஊழல் செய்தது போல இப்பொது செய்ய முடியவில்லை. அதுதான் உண்மை. ஆனா நாங்க உங்களை முன் போல ஊழல் செய்து ஜெயிக்க விடமாட்டோம். எங்களுக்கு மிண்ணணு வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எனவே எங்களுக்கு அதுதான் வேண்டும்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    4.02 கோடி வழக்குகள் இன்னும் கோர்ட்டுகளில் தேக்கம் என்று கூட தெரியாதா. இதெல்லாம் ஒரு சுப்ரீம் கோர்ட், அது பணம் நல்ல வரும் இந்த கூமுட்டை வழக்கில் என்று இதை ஏற்றுக்கொண்டு, அதே ஜாமீன், வாய்தா, தள்ளிவைப்பு என்று சொல்லிக்கொண்டே இளைத்தடிக்கும் பணம் என்னும் இனிப்பு எதிரில் இருப்பதால். இது வரை பண்ணிக்கொண்டு இருக்கின்றது இந்த கோர்ட்டு.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    ஒட்டு சீட்டு முறைதான் சரி . ஏழுமணிக்கு அப்புறம் குண்டர்களை வைத்து கள்ள ஓட்டுக்களை பாக்ஸில் போட்டுரலாம் . அப்புறம் ஆசிரியர் எல்லாம் ஆளுங்கட்சி மீதி அதிருப்தியில் இருப்பதால் (வாங்குகளுக்கு எதுவும் கொடுக்காதது திமுக பென்ஷனை பிடுங்கியது சிதம்ரம்பும் திமுகவும் ) அவர்களும் அதற்கு சிறப்ப துணை புரிவார்கள் . ஆகவே ஒட்டு சீட்டு முறை வேண்டும் மிலோர்ட் . இப்பஇடிக்கு திருமக குண்டனுங்க

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

    ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா கருத்து கணிப்புக முடிவுகள் அனைத்துமே மோடியை நோக்கி திருமபுவதால் எதிர் கட்சிகள் எதை சொல்லி தேர்தலை குலைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்

  • Roy Roy -

    They are searching for excuses, they have accepted defeat

  • blocked user - blocked,மயோட்

    பச்சோந்திகள்.... நேரத்துக்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசுவார்கள்... இவர்களை நம்பி வழக்கை எடுத்து விசாரித்தால் முடிவு தெரிய அடுத்த தேர்தலே வந்துவிடும்...

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    குண்டர்கள் வைத்து கள்ள வோட்டு போட்டு ஜெயித்து கொண்டு இருந்தோம் , இப்ப கள்ள வோட்டு போட முடியவில்லையே என்ற விரகத்தியின் வெளிப்பாடு இந்த எதிர் கட்சிகளின் ட்ராமா மக்களே புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் கொள்ளை அடிக்க நம்ம பேரை உபயோகித்து கொள்ளுகிறார்கள் , விடாதீர்

    • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

      ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் . சந்திரபாபு நாயுடு, அவருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றியதில் இருந்து இவ்வாறு கூறுகிறார். ஜெகனிடம் சரியான ஆப்பு வாங்க போவது உளவு துறை மற்றும் கருது கணிப்புகளில் தெளிவாக வந்துவிட்டது.

    • Endrum Indian - Kolkata,இந்தியா

      மிக மிக சரியான வார்த்தைகள்.

  • kalyanasundaram - ottawa,கனடா

    JUST TO UNPOPULAR THE GREAT MODIJI ALL THESE PARTIES TRY ALL SORTS OF GIMMICKS. NOW THEY MUST HAVE FELT THEIR DEFEAT ONCE FOR ALL. JAI HIND. GOD BLESS THE GREAT GENTLEMAN MR. NARENDRA MODI. SUPREME COURT WILL NOT ACCEPT THESE PARTIES PROPOSAL. WITH THESE ELECTRONIC MACHINE CHEATING HAS REDUCED TO A GREAT EXTENT. PAPER BALLOT MEANS HIGH AMOUNT OF CORRUPTION.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    உங்களுக்கென்ன . கோகோய் இருக்கிறார். ஜோசப் இருக்கிறார். ஜனநாயகத்துக்கும்   நேர்மைக்கும்தான்   ஆதரவுப் பற்றாக்குறையே . உண்மையே வெல்லும் . உங்கள் கொள்ளைக்கு இதோ முடிவுகாலம்

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      உங்களுக்கு வந்தா ரத்தம். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா...? என்னய்யா நியாயம்...? ஏன்..?

    • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

      அப்போ இதுக்கு முன்னாடி காங்கிரஸ் ஜெயித்த மூன்று மாநில ரிசல்ட் எப்படி ? அதையும் மறுதேர்தல் வைக்க வேண்டுகோள் விடுப்பீங்களாடா முட்டாள்களா? வந்தியத்தேவன் அப்போ காங்கிரஸ் ஜெயித்தா அது தக்காளி சட்டினி அதுவே பிஜேபி ஜெயித்தா ரத்தமா ?

  • N S Sankaran - Chennai,இந்தியா

    அறிவிலிகள் ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் நம்மில் பத்தில் ஒரு பங்கு கூட ஜனத்தொகை கிடையாது. ஓட்டு சீட்டை எண்ணுவது எளிது. நம் ஊரில் என்றைக்கு எண்ணி முடிப்பது? நடுவில் தில்லு முல்லுகளை அரங்கேற்றலாம் என்பதே இவர்கள் நோக்கம். நேர்மையாக ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாத கூட்டம்.

  • vvkiyer - Bangalore,இந்தியா

    நாயுடு கூட்டிக்கொண்டு போன எக்ஸ்பெர்ட் ஏற்கனவே தில்லுமுல்லு செய்து கைதானவர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை பார்த்து வெளியே ஓடியவர். . நாயுடு இப்படிப்பட்ட ஆட்களை நம்பி குறை கூறுகிறார்

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    இந்த சங்கிகளும் சங்கிகளின் அல்லக்கைகளும் வோட்டு சீட்டு முறைக்கு எதிர்ப்பு தெறிவிப்பதும் அதை ஆதரிப்பவர்களை வசை பாடுவதையும் பார்த்தால் இதில் ஏதோ மர்மம் மற்றும் உள்ளடி வேலை இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்ற சந்தேகம் பலமாக உள்ளது. அதற்க்கு தகுந்தாற்போல் சில பல இடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் இதை உறுதி செய்கிறது. மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் அல்லாத நேர்மையான தேர்தல் நடப்பது ஜனநாயக அவசியம்.

    • S Ramkumar - Tiruvarur,இந்தியா

      உங்களால் கள்ள ஒட்டு போட முடிவதில்லை. இப்ப 5 மாநில தேர்தல் முடிந்ததே அப்பா வாயை பொத்திகிட்டு இருந்தீங்களே. சங்கிகள் அள்ள கைகள். ஒன்று புரிந்து கொள்ளுங்கள் சங் பரிவார் எப்போதும் நாடு நல்லதையே நினைப்பவர்கள். உங்கள் பாக்கிகள், வின்சி காங்கிரஸ் அப்படி அள்ள.

    • blocked user - blocked,மயோட்

      பல்லாயிரம் கோடி செலவு செய்து பிரிண்ட் செய்து அதை எண்ண ஒரு வாரம் ஆகும்... காங்கிரஸ்தானே அறிமுகம் செய்தது? அப்பொழுது எங்கு சென்றீர்? சரி பார்க்கும் வசதியை கொண்டுவந்தவுடம் வயிற்றை கலக்குகிறதோ?

    • amirthalingam - pondicherry,இந்தியா

      ஆக எதிர்கட்சிகள் தோல்வி தோல்வி உறுதி என்று தெரிந்து சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்து விட்டது . ஒட்டு சீட்டு வந்தால் கள்ள ஒட்டு போட்டார்கள் குத்தம் சொல்லுவர்ர்கள் . ஆட தெரியாதவளுக்கு மேடை கோணல் என்றாள் . அது போல் எதிர்கட்சிகள் நிலைமை உள்ளது .

  • S.SRIDHAR - Trichy,இந்தியா

    No developed country is such a huge population of eligible voters . EVM S were introduced by congress govt considering this. when Election commission gave opportunity for them to check validity of machines, no one came forward.This how selfish interest plays

  • Pachiappan - bengaluru,இந்தியா

    வாரே வா.... கொஞ்ச நாளைக்கு முன்ன... ஐந்து மாநில தேர்தல் நடந்தது. அப்போது வராத பிரச்சினை, இப்போது மட்டும் ஏன்? உங்களுக்கு வந்தால் மட்டும் இரத்தம். மத்தவங்களுக்குனா அது தக்காளிச் சட்னியா? அதெல்லாம் செல்லாது... செல்லாது... பரம்பரை முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வெச்சது வெச்சதுதான். மக்களாட்சிப்படின்னா... மட்டும் இந்த பக்கம் வரவும். இல்லேன்னா இத்தாலிக்கே திரும்பவும்...நன்றி. ஜெய்ஹிந்த்.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      .... பொறுங்க.. மே 23க்கு அப்பால தெரியும்...? அவசரப்படாதீங்க...?

  • Ram Sekar - mumbai ,இந்தியா

    இந்த அய்யோக்கிய எதிர்கட்சிகளை ஒழிச்சுக்கட்டனும். வாயில என்னென்னம்மோ வருதுப்பா. சர்வாதிகார ஆட்சி வந்து இவனுங்கள இல்லாம பண்ணனும்.

Advertisement