Advertisement

26ல் பிரதமர் வேட்பு மனு தாக்கல்; வாரணாசியில் பிரியங்கா போட்டி?

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 26ல் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்த தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் எட்டு தொகுதிகளுக்கு, தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள, 72 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.


பேரணி:பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில், அடுத்த மாதம், 12ல் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில், வரும், 25 மற்றும் 26ல் நடக்கும் பேரணி மற்றும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி வருகிறார். அப்போது, 26ல், பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யஉள்ளார். நேற்று முன்தினம், உ.பி., மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, காங்., கட்சி வெளியிட்டது. ஆனால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

விலகினர்:பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., மூத்த தலைவர் சோனியாவின் மகளும், உ.பி., மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலரான பிரியங்கா போட்டியிடக்கூடும் என, காங்., கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக, முன்னாள் நீதிபதி, கர்ணன், பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத், பிரதமர் மோடி போன்ற தோற்றம் உள்ள அபிநந்தன் பதக், ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட, தேஜ் பஹதுார் யாதவ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக, 111 தமிழக விவசாயி கள் போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின், அவர்கள் போட்டியில் இருந்து விலகினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Why Congress is exposing all their weaknesses. When Rahul is accusing Modi on many fronts Rahul should be brave enough to stand in Varanasi to show to the people that he has got more support from people than Modi. Rahul is doubtful in Amethi itself and Wayanad may be his another waterloo.Rahul must improve his maturity as a Leader and come out clean in his court corruption charges and then only Rahul can get some image in front of people. Congress has become an untouchable Party to many other Parties. Sonia and Rahul are keeping mum on the charges of Swamy that Sonia is only 5th Standard pass and Rahul has not got M Phil degree in Cambridge University and Rahul was a out from University. Rahul and Sonia are put in a blame of lier and there is no response from both Sonia and Rahul Karunanidhi told that Sonia was a Toilet cleaner in Italy and Rahul is close to DMK Stalin. So Rahul becomes the son of a Toilet cleaner and Stalin has joined with Toilet cleaners. We wish Sonia and Rahul must hear what Kalaignar told about them earlier and Sonia after giving the Minister Post to Alagiri became AMMAIYAR. So Toilet cleaners can become AMMAIYARS all of a sudden if you get some favors. The back record of DMK is so bad and people must understand this and vote now.

 • BJPKAARAN - Coimbatore,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி, அந்த அளவுக்கு இந்திரா குடும்பத்திற்கு தைரியம் கிடையாது. நாட்டின் எதாவது ஒரு மூலையில் நின்று ஜெயிக்கத்தான் பார்ப்பார்கள். தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்கள் அல்லது நமது ப.சி. ஜெயித்தது போல் எதாவது அசிங்கம் செய்வார்கள். அப்புறம் மோடிக்கு எதிராக நின்று தோற்றது பெருமைதான் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. காங்கிரஸிற்கு இதெல்லாம் சாதாரணமப்பா.

 • R NAGARAJAN - Chennai,இந்தியா

  பிரியங்கா போட்டியிட மாட்டார் . அரசியலில் வந்ததும் தோல்வி என்கிற நிலைக்கு தள்ளப்பட மாட்டார் என்றே தோன்றுகிறது . வெல்ல முடியும் என தெரிந்தால் ராகுலே போட்டியிட்டிருப்பார் .இதை தவிர ராகுலும் சோனியாவும் சிறை செல்ல வொய்ப்புள்ளது .குடும்ப சொத்தான காங்கிரஸ் கட்சி கையை விட்டு செல்லாமல் இருக்க பிரியங்கா சேர்க்கப்பட்டுள்ளார்

 • Prabu.KTK - Coimbatore,இந்தியா

  அனு தினமும் 16 மணி நேரம் தேசத்திற்காக உழைக்கும் மிக சிறந்த பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது ஒரு மிகப் பெரிய வரம். மீண்டும் மோடி பிரதமராக வர எல்லோரும் தாமரை , இரட்டை இலை, மற்றும் முரசு, சின்னத்தில் வாக்கு அளிப்பீர் மோடி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அம்புட்டு தெகிரியம் இருக்குதா அக்காவுக்கு ?

Advertisement