Advertisement

தமிழகத்தில் தி.மு.க., இனி தலையெடுத்து விடக்கூடாது: எச்.ராஜா சூளுரை

சிவகங்கை தொகுதியில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
இங்கு, 2014 தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 4.76 லட்சம் ஓட்டுகள் பெற்றது. நான், 1.34 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். இக்கூட்டணியின் ஓட்டு வங்கி, 6.10 லட்சம். எதிரணியில் உள்ள, தி.மு.க.,- - காங்., 3.70 லட்சம் ஓட்டுகள் பெற்றன. இதில், 2.40 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது. சிவகங்கையில், பா.ஜ., வெற்றி உறுதி.

அ.தி.மு.க., கூட்டணி, பணபலத்துடன் தேர்தலை சந்திப்பதாக, தி.மு.க., புகார் கிளப்பி உள்ளதே?
துாத்துக்குடியில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் இதுபோன்று புகார் உள்ளது. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர்கள் வீட்டில், 30 கோடி ரூபாயை பூத் எண் போட்டு, மூட்டைகளாக கட்டியிருப்பதை, வருமான வரித் துறையினர் பிடித்தனர். தி.மு.க., -- காங்., கட்சிகள் தான், பண பலத்தை நம்பி, தேர்தலை சந்திக்கின்றன.

காங்., வேட்பாளர் கார்த்தியின் பணபலத்தை உங்களால் சமாளிக்க முடியுமா?
ஊழல் செய்து சம்பாதித்த பணம் மூலம் அரசியல் நடத்துகிறது, சிதம்பரம் குடும்பம். 2014 தேர்தலில், சிதம்பரம் மகன் கார்த்தி, பணத்தை வாரி இறைத்தார். ஆனால், அவரை விட எனக்கு, 30 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தன. பணத்தை இறைத்தால், ஓட்டளித்து விடுவர் என நம்புவது தவறு. கார்த்தி பணபலத்தை பயன்படுத்துவதை, வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம், மற்ற கட்சிகள் ஓட்டுக்கு பணம் தருவதை தவிர்ப்பர்.

நடுநிலையாளர்களை, பா.ஜ., எப்படி ஈர்க்கிறது?
'பிரதமர் மோடி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்' என, அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. அதிகபட்சமாக, 310 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். இதுவே, நடுநிலையாளர்களை எங்கள் பக்கம் திருப்ப வாய்ப்பு உள்ளது.

காங்., தலைவர் ராகுல், இரு தொகுதிகளில் போட்டியிட காரணம்?
கடைசி நேரத்தில், ஏன் வயநாடு தொகுதியில் போட்டி என, முடிவெடுக்க வேண்டும்? ஆரம்பத்திலேயே, வடக்கே, தெற்கே, இரு தொகுதிகளில் போட்டியிடுவேன் என அறிவிக்கலாமே! அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி களத்தில் இறங்கிய பிறகே, ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார். தோல்வி பயமே! ராகுலை வயநாடு நோக்கி தள்ளியது.

பிரதமர் மோடி, முதல்வர், இ.பி.எஸ்., ஆகியோரை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்க காரணம்?
நான், இதை பல மாதங்களாக சொல்லி வருகிறேன். ஸ்டாலின் மனநிலை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெ., மறைவுக்கு பின், உடனே ஆட்சியை கைப்பற்றி, முதல்வர் ஆகலாம் என எண்ணியது, நடக்கவில்லை. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வென்று, முதல்வர் ஆகலாம் என கனவு கண்டார். இந்த கனவை, அ.தி.மு.க.,- - பா.ஜ.,- - பா.ம.க., -- தே.மு.தி.க., கூட்டணி தகர்த்து விட்டது. அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைத்ததும், மூத்த அரசியல் தலைவர் என்றும் பாராமல், பா.ம.க., நிறுவனர் ராமதாசை தரக்குறைவாக திட்டினார். ஸ்டாலினுக்கு, அரசியல் தலைவருக்கான தகுதி கொஞ்சம் கூட இல்லை.

தமிழகம், கேரளாவில், கம்யூ., கட்சிகளின் நிலைப்பாடு வேறு வேறாக உள்ளதே?
மேற்கு வங்கத்தில், காங்., - மார்க்சிஸ்டுகள் மல்லுக்கட்டுவர்; டில்லியில் கட்டிப்பிடித்து கொள்வர். இது, கம்யூ., கட்சியின் வழக்கம். கோவையில், காங்கிரசுக்கு ஆதரவு, பாலக்காட்டில் எதிர்ப்பு. கம்யூ.,க்களின் நிலைப்பாடு பற்றி கவலைப்பட தேவையில்லை.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.,வின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
எக்காலத்திலும், தி.மு.க., ஆட்சிக்கு வரப்போவதில்லை. தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. திருவாரூரில், தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி. அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க.,வின் நிலை, ஆர்.கே.நகர் தேர்தல் போல் தான் இருக்கும்.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., குறைந்த தொகுதிகளை பெற்றதற்கு காரணம் என்ன?
தி.மு.க., தமிழகத்தில் இனி தலையெடுத்து விடக்கூடாது என்பது தான், பா.ஜ.,வின் குறிக்கோள். விட்டுக் கொடுக்கும் தன்மையுடன், குறைந்த தொகுதிகளை பெற்றுள்ளோம். ஊழல், குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்.

அ.தி.மு.க.,வை பிரதமர் மோடி இயக்குவதாக கூறுவது பற்றி?
எதிர்க்கட்சிகளின் ஆதாரமற்ற புகார்.

- எச்.ராஜா, வேட்பாளர், சிவகங்கை தொகுதி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இனி அவர் பற்றி பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை ..

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

 • raj - salem,இந்தியா

  இந்து கடவுள்களை பற்றி கேவலமாக பேசும் வீரமணி போன்றவர்களை தட்டி கேட்ப்பதற்கு எந்தவொரு கட்சிக்கும் தைரியம் கிடையாது.அனைத்து கட்சிகளும் இந்துக்களின் வோட்டுகளை பெறுவதில் மற்றும் குறியாக உள்ளனர்.இந்துமதத்தை இழிவு படுத்தும் நபர்கள் மீது ஏந்தவுரு இந்துவும் ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை .போராட்டம் நடத்தவில்லை. வேறு எந்த மதத்தை பற்றி பேசுவதற்கு வீரமணிக்கு யோக்கியதை உண்டா.

 • Rajan - singapore,சிங்கப்பூர்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வாரிசு அரசியல் குடும்ப கட்சி ஊழல் ஆட்சி மீண்டும் வரக்கூடாது. சுடாலின் தன்பேரனுக்கு முடிசூட்ட காத்திருக்கிறார். எச்.ராஜா மிகப்பெரிய வெற்றி அடைவது மக்கள் எடுத்த முடிவு. எல்லா அதிமுக கூட்டணி வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவார்கள். ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஹிந்து மக்களுக்கு பாதுகாப்பு அதிமுக-பாஜக அரசுகளே. திமுக-காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால், ஹிந்துக்கள் இரண்டாம் நிலைக்கு கேவலமாக தள்ளப்படுவார்கள். எல்லாம் கோவில்களும் அழிவது உறுதி.

Advertisement