Advertisement

சுவையின் தலைமை செயலகம்!

நாக்கில் படும் சுவை, மூளையின் எந்தப் பகுதியில் உணரப்படுகிறது? இந்த கேள்விக்கு சரியான விடையை, இதுவரை விஞ்ஞானிகளால் சொல்ல முடியாமல் இருந்தது. அண்மையில், 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை, அதற்கு விடை கண்டுபிடித்திருப்பதாக சொல்கிறது.பார்வை, ஒலி போன்றவற்றை, மூளையின் எந்த பகுதிகள் அலசி உணர்கின்றன என்பது வெகுகாலமாகவே அறியப்பட்டது தான். என்றாலும், ருசி என்பது மிகவும் சிக்கலான ஒரு உணர்வாக இருப்பதால், அதை துல்லியமாக அறிவதில் சிக்கல்கள் இருந்து வந்தன.அண்மையில் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எப்.எம்.ஆர்.ஐ., 'ஸ்கேனர்' மற்றும் புதுமையான புள்ளியியல் அலசல் முறை ஆகியவற்றை வைத்து இனிப்பு, கசப்பு, காரம் போன்ற, அடிப்படை சுவைகளை ருசிக்கும் போது, மூளையின் எந்தப் பகுதிகள் துாண்டப்படுகின்றன என, ஆராய்ந்தனர்.கடைசியில் பெரும்பாலானோரின் மூளைகளில், 'இன்சுலர் கார்டெக்ஸ்' என்ற மூளையின் நடுப்பகுதியில் உள்ளது தான் சுவைகளை உணர்கிறது என்பதை கண்டறிந்தனர். இனிப்பு நல்லது, கசப்பு கெட்டது என்று சுவை பற்றி நமக்கு தனிப்பட்ட கருத்துகள், நினைவுகள் இருப்பதால், அந்தந்த சுவையை ருசிக்கையில், மூளையின் நினைவு அடுக்குகள் பலவும் துாண்டப்படுகின்றன. இதனால், சுவைக்கென மூளையில் தனி இடம் இல்லையோ என்ற கருத்து நிலவியது.நவீன ஸ்கேனர் மற்றும் அலசல் முறை மூலம், அந்த சந்தேகம் இப்போது தீர்க்கப்பட்டு இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement