Advertisement

விண்வெளி உடம்புக்கு நல்லதா?

பல மாதங்களாக விண்வெளியில் வசிப்பது, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை, விஞ்ஞானிகள் முன்னரே கணித்திருந்தனர். அண்மையில், 'நாசா' நடத்திய ஆய்வு, கவலை தரும் உடல்நலச் சிக்கலை கண்டறிந்துள்ளது.புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட அதிவேகமாக பயணிப்பது, புவியீர்ப்பு குறைந்த சூழலில் வேலை பார்ப்பது, பிரபஞ்ச கதிர்வீச்சுக்கு ஆளாவது, துாங்கும் முறையில் மாற்றம், சுற்றம் நட்பை பிரிந்து தனிமையில் விண்வெளியில் வாழ்வது போன்ற பல காரணிகள், விண்வெளி வீரர்களின் உடல் மற்றும் மனநலனை பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, வீரர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதால், ஏற்கனவே அவர்களது உடலில் செயலற்று போயிருந்த வைரஸ்கள் மீண்டும் இயங்கத் துவங்கும் ஆபத்து இருப்பதாக, விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.இதனால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நீண்ட காலம் வசிப்பது, பெரிய உடல்நலச் சவால்களை ஏற்படுத்தும் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • shahul hameed - LBK,இந்தியா

Advertisement