Advertisement

இதய கடிகாரம்!

'ஆப்பிள்' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்பிள் வாட்சில், நேரம் காட்டுவது, நினைவூட்டுவது, தொலைபேசி அழைப்பு என, பல வசதிகள் உண்டு. அதை, கையில் கட்டியிருப்பவரின் உடல் நிலையை கண்காணிக்கவும் உதவும் என்கிறது ஓர் ஆய்வு.ஆப்பிளும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் சேர்ந்து நடத்திய விரிவான ஆய்வின்படி, ஆப்பிள் வாட்சின், 'சீரிஸ்' வரிசையில், 1, 2 மற்றும் 3 மாடல்களை அணிந்திருப்போரில், சீரற்ற இதயத் துடிப்பு - 'அட்ரியல் பைப்ரிலேசன்' ஏற்பட்டோரை, நம்பத் தகுந்த அளவுக்கு துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை செய்தன.இந்த ஆய்வு முடிந்த பின் வந்த, 'சீரிஸ் - 4' வாட்ச் மாடலில், இ.சி.ஜி., வசதியும் வந்துள்ளது. ஆனால், அந்த மாடல் வருவதற்குள் இந்த ஆய்வுக்கான சோதனைகள் முடிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement