Advertisement

இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

சென்னை: கணக்கு பரிவர்த்தனையில் குளறுபடி செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு, இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன், 45. இவருக்கு, எஸ்.பி.ஐ., வங்கியில், கணக்கு உள்ளது. திடீரென ஒரு நாள், அவரது கணக்கில் இருந்து, ஏர்டெல் மொபைல்போன் பில், 2,500 ரூபாய் கட்டப்பட்டுள்ளதாக, மொபைல் போனுக்கு தகவல் பதிவு வந்தது.இது குறித்து அவர், வங்கி மற்றும் அதன், 'கிரெடிட் கார்டு' சேவை பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். ஹரியானா மாநிலம், குர்கான், சைபர்சிட்டியில் உள்ள, சேவை மையத்துக்கு, 'இ - மெயில்' அனுப்பியும், அந்நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து அவர், சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், தவறாக பணம் பரிவர்த்தனை செய்ததற்காக, 2,500 ரூபாய் வழங்க வேண்டும். இத்துடன், 1 லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, கோரியிருந்தார், 2013ல் இருந்து, வழக்கு நடந்து வந்தது.வழக்கு விசாரணையில், 'சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வங்கி கிரெடிட் கார்டு சேவை பிரிவு தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:வங்கி சேவையில், குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, பிடித்தம் செய்யப்பட்ட, 2,500 ரூபாய் திரும்ப வழங்க வேண்டும். இத்துடன், இழப்பீடு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 17 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement