Advertisement

மகளை காதலித்து கைவிட்டவனை கடத்திய தாய் உட்பட மூவர் கைது

திருவொற்றியூர்: மகளை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த வாலிபரை கடத்திய, தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம், செய்யாறு அடுத்த கன்னிமங்கலத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணராஜ், 25; சென்னை, தாம்பரம் அடுத்த இரும்புலி யூரில் உள்ள தனியார்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில், திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்த திவ்யா, 22, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர்கள், ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன், திவ்யா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, கிருஷ்ணராஜிடம் கேட்டுள்ளார். இதனால், திவ்யாவிடம் பேசுவதை, கிருஷ்ணராஜ் தவிர்த்துள்ளார்.காதல் விவகாரம் மற்றும் திருமணம் செய்ய மறுக்கும் கிருஷ்ணராஜ் குறித்து, திவ்யா, தன் தாய் கவிதாவிடம் கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த கவிதா, தன் வீட்டருகே வசிக்கும், ஆந்திர மாநிலம், கடப்பாவில் சட்டக்கல்லுாரி படிக்கும் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து, திருமணம் குறித்து பேச, திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலுக்கு வருமாறு, நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணராஜை அழைத்துள்ளார்.கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவருடன், கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, 'காரில் அமர்ந்து பேசலாம்' எனக்கூறிய கவிதா உள்ளிட்டோர், கிருஷ்ணராஜை கடத்திச் சென்றனர்.திருவொற்றியூர் போலீசாரிடம், வசந்தகுமார் புகார் தெரிவித்தார்.கவிதா உள்ளிட்டோர், திருவொற்றியூர், குப்பைமேடு அருகே, கிருஷ்ணராஜை மிரட்டிக் கொண்டிருந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர்.அங்கு விரைந்த போலீசார், கிருஷ்ணராஜை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட கவிதா, சட்டக்கல்லுாரி மாணவர்களான சங்கர்குமார், 28, ஹரிகிருஷ்ணன், 25, ஆகியோரை கைது செய்தனர். மேலும், சரவணன் என்பவனை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    வசந்த குமாரை கை, வாயை கட்டி டிக்கியில் போட்டிருந்து, திருமணம் முடிந்த பின் விட்டிருந்தால் போலிஸுக்கு போயிருப்பாரா? - கூலிப்டை தலைவன் இளங்குமாரன்.

Advertisement