Advertisement

வெடித்து சிதறிய மின்பெட்டி

திருவொற்றியூர்: அதிகாலையில், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின்பெட்டியால், திருவொற்றியூரில் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர், பெரியார் நகர், டி.எஸ். ராமானுஜம் நகரில், நேற்று அதிகாலை, திடீரென, பயங்கர சத்தம் கேட்டது.இதனால் பதறிய, குடியிருப்பு வாசிகள், வீடுகளில் இருந்து வெளியேறி பார்த்த போது, சாலையோரம் இருந்த மின்பெட்டி ஒன்று, தீப்பற்றி எரிந்தது.தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள், உடனடியாக, அப்பகுதியில், மின் வினியோகத்தை துண்டித்தனர். தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மின்பெட்டி முற்றிலும் எரிந்து அணைந்தது.முறையான பராமரிப்பு இல்லாததால், மின்பெட்டி வெடித்தது என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement