Advertisement

வாழைப்பழ காமெடி பாணியில் ரயில்கள் ரத்து, ரயில்வே அதிகாரிகள் மீது பயணியர் ஆத்திரம்

தாமதம் என்ற பெயரில், தாம்பரம் - கடற்கரை ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை, கடற்கரை - தாம்பரம் இடையே, இருவழிகளிலும், தினமும், 244 ரயில்களும்; செங்கல்பட்டு வரை இரு வழியில், 44 ரயில்களும் இயக்கப்படுகின்றன.கூட்ட நெரிசல்இந்த ரயில்களில், பயணியர் கூட்டம் அதிகம் உள்ளது. பெட்டிகளில் நிற்க இடமின்றி, படியில் தொங்கியபடி, பலர் பயணம் செய்யும் நிலை உள்ளது.இந்நிலையில், ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாலும், அறிவிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாலும், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.கடற்கரை - தாம்பரம் இடையே, காலை, மாலை நேரத்தில், ஆறு நிமிடங்களில் இருந்து, 10 நிமிட இடைவெளியிலும்; மற்ற நேரங்களில், 10 நிமிடங்களில் இருந்து, 15 நிமிட இடைவெளியிலும்,மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.கூட்டம் அதிகம் உள்ள, காலை, மாலை நேரத்தில் கூட, ரயில்கள் தாமதம் காரணம் காட்டி, இடையிடையே, சில ரயில்கள்,அவ்வப்போது ரத்து செய்யப்படுகின்றன.இது குறித்து, நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை; தாமதம் குறித்தும் தெரிவிப்பதில்லை.நடவடிக்கைஇது குறித்து விசாரித்தபோது, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:வேண்டுமென்றே தான், ரயில் ரத்து குறித்து அறிவிப்பு வெளியிடுவதில்லை. ரயில் ரத்து செய்யப்பட்டாலும், அடுத்த ரயில், 15 நிமிடத்தில் வந்து விடும். எனவே, 'ரயில் தாமதம்' என, அறிவிப்பு ஏன் செய்ய வேண்டும்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.கரகாட்டக்காரன் படத்தில், வாழைப்பழம் காமெடி மாதிரி, ரயிலை ரத்து செய்து, அட்டவணைப்படி அடுத்து வர வேண்டிய ரயிலை காட்டி, 'அது தான் இது' என, அதிகாரிகள், பயணியரை ஏமாற்றுகின்றனர்.இயக்க பிரிவு உயர் அதிகாரிகள், இந்நிலை குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்
- நமது நிருபர் -.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    யாருமே சரியான நேரத்திற்கு ஆபிஸ், கல்லூரிக்கு போவதில்லை. சீக்கிரமே போகலாமே எங்களை மட்டும் குறை சொல்பவர்கள், அவர்கள் சரியான நேரத்திற்கு தூங்குகிறர்களா, இரவில் எழுத்து தொல்லை கொடுப்பதில்லையா? அதெல்லாம் சொல்லிவிட்டா செய்கிறார்கள். எங்களுக்கும் குடும்ப தொல்லைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எந்த சட்டத்தையும் மதிக்காத நாம், ரயில் மடடும் சடடத்தை மதிக்க வேண்டும் என்பது வேடிக்கையே-. ரயில்வே அதிர்க்கர் ராயப்பன் (புனைபெயர் அடிக்கு பயந்து வைத்துக் கொண்டது)

Advertisement