Advertisement

நலச்சங்கத்தினரிடம் ஓட்டு வேட்டை

ஆலந்துார்: ஆலந்துார் சட்டசபை தொகுதி நலச்சங்கத்தினரிடம் ஆதரவு கோரிய, தி.மு.க., வேட்பாளர், டி.ஆர்.பாலுவிடம் ஏராளமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, தி.மு.க., வேட்பாளர், டி.ஆர்.பாலு, ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகர் நலச்சங்கத்தினர்களை நேற்று சந்தித்து, ஆதரவு கோரினார். அப்போது, பழவந்தாங்கல் - -நங்கநல்லுார், 5வது தெருவுக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். மேலும், நங்கநல்லுார் பகுதியில் இசை, கலை நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம், மகளிர் கல்லுாரி உள்ளிட்ட வசிதிகள் ஏற்படுத்த தர வேண்டும்.ஆலந்துாரில் வீட்டு வசதி வரிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், டி.ஆர்பாலுவிடம், நலச்சங்கத்தினர் சார்பில் முன் வைக்கப்பட்டன.இதற்கு பதில் அளித்த, டி.ஆர்.பாலு, 'நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தார். வேட்பாளருடன், தொகுதி எம்.எல்.ஏ., அன்பரசு மற்றும் கட்சியினர் இருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement