Advertisement

ஐ.பி.எல்., டிக்கெட் விற்பனை

சேப்பாக்கம்: சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும், ஐ.பி.எல்., இரண்டாம் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை காலை துவங்க உள்ளது.ஐ.பி.எல்., 'டுவென்டி - 20' தொடர், 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது. இந்த போட்டியில், சென்னை அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்நிலையில், 31ம் தேதி, சென்னை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில், சி.எஸ்.கே., அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை காலை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.இந்த போட்டிக்கான, குறைந்தபட்ச டிக்கெட் விலை, 1,300 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், 2,500; 5,000 மற்றும் 6,500 ரூபாய் என, டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு, இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement