Advertisement

தேசிய, 'கிக் பாக்சிங்' தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னை: மஹாராஷ்டிராவில் நேற்று துவங்கிய, தேசிய அளவிலான, 'கிக் பாக்சிங்' போட்டியில்,தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்து வீராங்கனையர்உட்பட, 46 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.'வாகோ இந்திய அமெச்சூர் கிக் பாக்சிங்' கூட்டமைப்பு மற்றும் 'மஹாராஷ்டிரா கிக் பாக்சிங்' சங்கம் சார்பில், தேசிய அளவிலான, பெடரேஷன் கோப்பைக்கான, கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, புனேவில் உள்ள, பாலவோடி பகுதியில், நேற்று துவங்கியது.இந்த போட்டி, 28ம் தேதியுடன் நிறைவுப்பெறுகிறது.இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 1,000 வீரர்கள், பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.அதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், ஐந்து வீராங்கனையர் உட்பட, 46 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement