Advertisement

தேர்தல் பயிற்சி வகுப்பு 500 அலுவலர்கள் பங்கேற்ப

திருவொற்றியூர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில், 500 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில், ஏப்., 18ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்புகள், திருவொற்றியூர், பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது.இதில், திருவொற்றியூர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர், ராஜசேகர், வேலுச்சாமி, தாசில்தார், முருகேசன் உள்ளிட்ட, மாநகராட்சி தேர்தல் பிரிவு, சுகாதார அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் பங்கேற்று, ஓட்டு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திர செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.பயிற்சியில், மாற்றுத்திறனாளிகள், வயதானோர் ஓட்டளிக்கும் போது செய்ய வேண்டிய வழிமுறைகள், 49 ஓ படிவம் உள்ளிட்ட, தேர்தல் நடைமுறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 500 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்று, சந்தேகங்களை தெளிவாக விளங்கிக் கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement