Advertisement

சினிபிட்ஸ்1 - 24.3.2019

'குழந்தை பிரசவிக்கப்போகிறது'ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி நடிக்க, காலீஸ் இயக்கியுள்ள படம், கீ. பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம், ஒரு வழியாக, ஏப். 12ம் தேதி வெளியாகிறது.இப்படம் குறித்து, நிக்கி கல்ராணி கூறியதாவது:நீண்ட இடைவேளைக்கு பின், இப்படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், இயக்குனர் காலீஸ் ஆகியோருக்கு, நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தை, நான்கு ஆண்டுகளாக, ஒரு குழந்தை போல் பாதுகாத்து வைத்தனர். இப்போது குழந்தை, பிரசவிக்கப் போகிறது. இப்படம், பெரும் வெற்றியடையும் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.----'உறியடி - 2' பேச வைக்கும்: சூர்யாநடிகர் சூர்யா தயாரித்துள்ள படம், உறியடி - 2. படத்தை இயக்கி, நடித்திருப்பவர், விஜய்குமார். இப்படத்தின், 'டீசர்' வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், சூர்யா பேசியதாவது:என்னால், எந்த உதவி செய்ய முடியுமோ, அதைத் தான், இப்படத்திற்கு செய்தேன். எங்கள், '2 - டி' நிறுவனம், 10 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது.எனக்கு, 'நடிகரின் மகன்' என்ற அடையாளம் உள்ளது. ஆனால் விஜய்குமார், எந்த அடையாளமும் இல்லாமல், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.இப்படம், உங்களுக்கு விருந்தாக இருக்காது. ஆனால், உங்களை தொல்லைப்படுத்தும்; யோசிக்க வைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.------எல்லாம் நடிப்பு தான்: சமந்தாசமந்தா நடித்த, சூப்பர் டீலக்ஸ் படம், 29ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, தன் கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த, மஜ்லி தெலுங்கு படம், ஏப்., 5ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.மஜ்லி படத்தில், நாக சைதன்யா, திவ்யன்ஷா கவுசிக் இருவரும், உதட்டோடு உதடு சேர்த்து, முத்தம் கொடுத்த காட்சி, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து, சமந்தா கூறுகையில், ''சினிமாவில், முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது, எல்லாமே நடிப்பு தான். நானும், என் கணவரும், நல்ல நட்பில் உள்ளோம். எங்கள் விருப்பப்படியே நடிக்கிறோம்,'' என்றார்.-----துருவ் படத்தில் கவுதம் மேனன் இல்லைவிக்ரம் மகன் துருவ் நடித்த, வர்மா படத்தை, பாலா இயக்கியிருந்தார். 'படம், நன்றாக இல்லை' என, தயாரிப்பாளர் குற்றம் சாட்டி, வெளியீட்டுக்கு முன்பே, படத்தை கிடப்பில் போட்டார்.இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி படத்தில், இணை இயக்குனராக பணியாற்றிய, கிரிசாயா, வர்மா படத்தை, மீண்டும் இயக்குகிறார். இப்படத்திற்கு, ஆதித்ய வர்மா என, பெயரிட்டுள்ளனர்.இப்படத்தில் பனீதா சந்து, ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். மேலும், துருவுக்கு தந்தையாக, கவுதம் மேனன் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இத்தகவலை, படக்குழு மறுத்துள்ளது.-----'பிக்பாஸ்' நடிகை அலப்பறை'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் பிரபலமானவர், நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர், அலேகா படத்தில், நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நாயகனாக, ஆரி நடிக்க, எஸ்.எஸ்.ராஜமித்ரா இயக்கி வருகிறார்.'ஐஸ்வர்யா தத்தா, படபிடிப்பிற்கு ஒத்துழைப்பு தராததால், திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை' என, படக்குழு குற்றம்சாட்டியுள்ளது.----'வாழ்க்கை மிகப்பெரிய பார்ட்டி'மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்தாக, ஆதியுடன் இணைந்துள்ளார். சமீபத்தில், உல்லாச படகில் சவாரி செய்த ஹன்சிகா, ஆட்டம், பாட்டத்துடன், தனக்கு நெருக்கமானோருக்கு, 'பார்ட்டி' வைத்துள்ளார். அப்படத்தை, 'இன்ஸ்டாகிராம்' வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'வாழ்க்கையே, ஒரு மிகப்பெரிய பார்ட்டி' என, குறிப்பிட்டுள்ளார்.---விஜய் ஆண்டனி படத்தில் கஸ்துாரிகமல், விஜய்காந்த், பிரபு, சத்யராஜ் என, பலருடன் நடித்தவர், நடிகை கஸ்துாரி. தற்போது, 'டுவிட்டர்' வலைப்பக்கத்தில், சர்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதில், 'பிசி'யாக உள்ளார்.இந்நிலையில் அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும், தமிழரசன் படத்தில், கஸ்துாரி, டாக்டராக நடிக்க உள்ளார்.----கமல் மகளின் கவர்ச்சிகமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், படங்களில் நடிப்பதை குறைத்து, இசை மற்றும் 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இவர், கவர்ச்சி, 'போட்டோ ஷூட்' நடத்தி, அந்த படங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement