Advertisement

தேர்தல் பறக்கும் படையில் போக்குவரத்து போலீசார் சேர்ப்பு

சென்னை: பணப் பட்டுவாடா தடுப்பு சோதனையின் போது, நிறுத்தாமல் செல்லும் வாகனங்களை பிடிக்க, தேர்தல் பறக்கும் படை குழுவில், போக்குவரத்து போலீசார் சேர்க்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில், ஏப்., 18ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர், 24 மணி நேரமும், வாகன, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தென் சென்னையின், ஆறு சட்டசபை தொகுதியில், 24 மணி நேர சோதனைக்காக, ஒரு தொகுதிக்கு, 3 குழுக்கள் வீதம், 18 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஒரு குழுவில், தேர்தல் பறக்கும் படை அலுவலர், கண்காணிப்பாளர், 'வீடியோ' பதிவு அலுவலர் மற்றும் ஒரு எஸ்.ஐ., இரண்டு காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். பகல் நேர வாகன சோதனையின் போது, அடையாறு, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில், பல வாகன ஓட்டிகள் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால், சோதனை நடத்தி, துரித நடவடிக்கை எடுக்க முடியாமல், பறக்கும் படையினர் திணறினர். இதையடுத்து, ஒவ்வொரு பறக்கும் படை குழுவிலும், நான்கு போக்கு வரத்து போலீசார் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பறக்கும் படை வாகனத்தை, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து செல்வர். நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள், போக்கு வரத்து போலீசார் உதவி யுடன் நிறுத்தப்படும்.இதனால், பறக்கும் படையினர் துரிதமாக செயல்பட முடியும் என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement