Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'காலி பானையை காட்டி, ஓட்டு கேட்டுரலாம்... வேகாத வெயில்ல, பலாப்பழத்தை துாக்கிட்டு திரிய முடியுமா... விஷயம் புரியாம புலம்புறாரே...' என, கூற தோன்றும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேச்சு:சிதம்பரம் தொகுதியில் போட்டியிட, முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம்; ஆனால், கிடைக்கவில்லை. பின், அதிகாரிகள் என்னென்ன சின்னங்கள் உள்ளன என்ற பட்டியலை கொடுத்தனர். அதில் உள்ள, வைரம், பலாப்பழம் சின்னங்களை தொடர்ந்து கேட்டேன். அவையும் இல்லை என்றனர். இறுதியாக, பானை சின்னத்தை கேட்டு பெற்றோம். அனைவருக்கும் சின்னங்களை ஒதுக்கி விட்டு, எங்களை காக்க வைத்தனர்.


'மத்திய அரசில் அங்கம் வகிக்க, தி.மு.க., காத்து கிடக்கிறது என, நாசுக்காக குத்தி காட்டுகிறாரோ' என எண்ண தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: முல்லைப் பெரியாறு பிரச்னையில், உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரள அரசுக்கு, மத்திய, பா.ஜ., அரசு பச்சைக்கொடி காட்டியது. மேகதாதுவில் அணை கட்டவும் அனுமதி அளித்தது. எனவே, வரும் தேர்தலில், வெற்றி பெற்று, மத்தியில் அமையும் ஆட்சியில், தி.மு.க., பங்கேற்கும். பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலை பாதுகாத்து, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவோம்.


'பழைய நெனப்புடா பேராண்டி' என்ற கதையாக முன்னாள் அமைச்சர், பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி: அண்ணாமலை பல்கலையில், இன்ஜினியரிங் படித்த போது, அண்ணாதுரையை நேரில் சந்தித்தேன். படிப்பை முடித்த பின், அரசியலில் ஈடுபடப் போவதாக அவரிடம் கூறினேன். அவர், என்னை வேலைக்கு போகச் சொன்னார். மின் வாரியத்தில், ஏழாண்டுகள் பணியாற்றினேன். மீண்டும் அவரிடம் என் ஆசையை கூறினேன். அவர், என் வேலையை விடச் சொன்னார். நானும் சந்தோஷமாக விட்டு விட்டு, தேர்தலில் நின்றேன். 2,500 ரூபாய் தேர்தல் செலவுக்கு கொடுத்தார். அப்போது, தரம் தாழ்ந்த பிரசாரம் இருந்ததில்லை.


'கட்சியில் யாரும் கண்டுக்காத விரக்தியில், இப்படி போட்டு தாக்குகிறாரோ' என, சந்தேகப்பட தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பேச்சு:
உலக அளவில், இந்திய பொருளாதாரம், ஐந்தாவது இடத்தில் உள்ளதாக, பிரதமர் மோடி பெருமிதமாக கூறி வருகிறார். உண்மையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக, மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரதமருக்கு மட்டுமல்ல, நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியவில்லை. அன்னிய செலாவணி மதிப்பை வைத்து, அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். அது, தொடர்ந்து மாறக்கூடியது என்பது, அவர்களுக்கு புரியவில்லை. மக்களின் வாங்கும் திறனை வைத்து பார்த்தால், உலகில், மூன்றாம் இடத்தில், இந்தியா உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்படியே திமுகவில் ராஜ்யசபா உறுப்பினராகி காங்கிரஸ் கூட்டணியில் வெளியுறவுத்துறை அமைச்சராகி இலங்கைப் பிரச்னையை ஒரேநாளில் தீர்த்துவையுங்கள் ராஜ தந்திரியாரே

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்புறம் திமுக அதிமுக பா.ம க என்று பலகட்சி தண்ணீர் குடித்தவர் பண்ருட்டியார் பா.ம.கவிலிருந்து மருத்துவர் ஐயாவையே வெளியேற்றியவர் இவர்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எளியவர்களின் சின்னம் பானை, குக்கர் பணக்காரர்களின் சின்னம் என்று பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் ஐயா

Advertisement