Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்க வயசை விட, அந்த தலைவர்களின் அரசியல் அனுபவம் ஜாஸ்தி... இப்படி எல்லாம் பேசி, உங்க தாத்தாவின் பெருமையை சீர்குலைக்கணுமா...' எனக் கேட்க தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன், உதயநிதி பேச்சு: நரேந்திர மோடி, நம் நாட்டின் பிரதமர் இல்லை; அவ்வப்போது வந்து செல்லும், என்.ஆர்.ஐ., இந்தத் தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான், கதாநாயகன்; வில்லன், மோடி தான். அவரின் அடியாட்கள் தான், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., காமெடியன்கள், ராமதாசும், அன்புமணியும். தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி இல்லை; 'அடல்ட்ஸ் ஒன்லி' ஆட்சி.


அ.தி.மு.க., - எம்.பி., அருண்மொழித்தேவன் பேச்சு: அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றுள்ளதால், 'மதச்சார்பான கூட்டணி' என்றும், பா.ம.க., இடம் பெற்றதால், 'ஜாதி சார்பான கூட்டணி' என்றும், தி.மு.க., தரப்பில், தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.,வில், ஹிந்துக்கள் இருப்பதால், அது மதச்சார்புள்ள கட்சி எனக் கூற முடியாது. அனைத்து சமுதாயத்தினரும், அக்கட்சியில் உள்ளனர். தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் உள்ளதால், மதச்சார்பான கூட்டணி எனக் கூறலாமா... தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியால், 'ஜாதிக் கூட்டணி' எனக் கூறுவது சரியாக இருக்குமா?


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் பேச்சு: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 90 சதவீதம், 'காப்பி' அடிக்கப்பட்டவை. 10 சதவீதம், 'ஒரிஜினல்' ஆக இருந்தாலும், அதுவும் மோசமாக உள்ளது. அவர்களின் தேர்தல் அறிக்கையில், கதாநாயகனும் இல்லை; கதாநாயகியும் இல்லை. ஏன், வில்லன் கூட இல்லை. அது வெறும், 'காமெடி' படம் தான்.


'தேர்தல்ல போட்டியிட பயப்படலைன்னு, ரஜினியை வம்புக்கு இழுக்கிறாரோ' என, சந்தேகப்பட தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் தலைவர், கமல் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும், என்னைச் சின்ன வயதிலேயே ஈர்த்தவை தான். அதே வாக்குறுதிகளைத் தான், இப்போதும் கூறுகின்றனர். தேர்தலில் போட்டியிட, நான் அஞ்சவில்லை. அந்த பயமெல்லாம் இருந்தால், கட்சியே துவங்கியிருக்க மாட்டேன்.


கள்ளக்குறிச்சி, தே.மு.தி.க., வேட்பாளர், சுதீஷ் பேச்சு: நான் இங்கு, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, 1.50 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். தற்போது, மூன்று பெரிய கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். இது, பலமான கூட்டணி. எனவே, இந்தத் தேர்தலில், நான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவேன். மோடி மீண்டும் பிரதமராக வருவார். அதனால், மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும், எளிதில் பெறலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement