Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை


'உங்க, துணை முதல்வர் மகன், தேர்தலில் போட்டியிடுறது எந்த கணக்குல சேருது சார்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர், மணியன் பேச்சு:லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வில், 'சீட்' வழங்கியதில், வாரிசு அரசியல் உள்ளதாகச் சொல்வது தவறு. வாரிசு அரசியல் என்பது, இந்தியாவில், நேரு குடும்பத்தில், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என, தொடர்கிறது. தமிழகத்தில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, சபரீசன் என, வளர்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வில், பரம்பரை வாரிசு அரசியல் என்பது இல்லை.
'உங்க முகத்தை அடிக்கடி பார்க்கிறாங்களான்னு, மக்கள் தாங்க சொல்லணும்... நீங்க எப்படி சொல்ல முடியும்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், நீலகிரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா பேச்சு: நான் பிறந்தது, பெரம்பலுார் என்றாலும், புகுந்தது நீலகிரி. பிறந்த வீட்டை விட, புகுந்த வீட்டில் பெயர் எடுக்க வேண்டும். கடந்த, 2009 - 2014ல், சத்தியமங்கலத்திற்கு, சார்பு நீதிமன்றம் கொண்டு வந்தது, இந்த ராஜா தான். தேர்தலில் தோற்றாலும், தொகுதிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளேன். வெற்றியோ, தோல்வியோ, மக்களை நான் நேரடியாக சந்திப்பவன் என்பதை, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

.'நீங்க பரிசீலிச்சு, பேசி, வேட்பாளரை அறிவிச்சு, ஒத்த கருத்தை எட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடுறதுக்குள்ள, தேர்தல் முடிஞ்சிடும்... ரொம்ப நல்லது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தேர்தல் அறிக்கை என்பது, அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிகளும், தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே, என் எண்ணம். தமிழகத்திற்கு என்று, தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து, பா.ஜ., பரிசீலித்து வருகிறது.

தமிழக தொழில் துறை அமைச்சர், சம்பத் பேச்சு: தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 1 கோடி பேருக்கு, சாலைப் பணியாளர் வேலை வழங்கப்படும் என, உறுதி அளித்துள்ளனர். தமிழகத்தின் நிதி நிலையை பற்றி, எதிர்க்கட்சி தலைவர், முழுமையாக அறியவில்லை எனத் தெரிகிறது. நடைமுறையில் செயல்படுத்த முடியாத திட்டத்தை, தேர்தல் வாக்குறுதியாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அள்ளி விடுகிறார்.


பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை ஒரு, 'டிஷ்யூ' பேப்பர் தான். அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டங்களுக்கு, எங்கிருந்து நிதி வரும் என, நீதிமன்றங்களே கேள்வி எழுப்பி உள்ளன. நிதி ஆதாரங்களை யோசிக்காமல், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டதால், அது மக்களை ஏமாற்றும், வெற்று அறிக்கை தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தமிழகத்துக்கு என்ன சிறப்பாக செய்து கிழிச்சிரபோறீங்க அதெல்லாம் காமராசர்க்காலத்தோட போச்சு அதுக்கு அப்புறம் வெற்றிபெற்றவர்கள் தங்கள் குடும்பத்துக்கு சேர்த்துக்கொள்ளவே நேரம் பத்தவில்லை

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஐயா ராசா உங்களுக்கு 2g யில் கிடைச்சதை பலதொழில்களில் முடக்குவதுக்கு நேரம் சரியாக இருந்திருக்குமே இன்னைக்கு ஜெகத் ஐயா லங்கையில் ஆயில் தொழிலில் பலமில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார் என்று போட்டிருக்கு

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒருகோடிபேருக்குவேலை ஆனால் அனைவரும் திமுக கட்சி உறுப்பினர்களாகத்தான் இருக்கனும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நடக்குமோ நடக்காதோ வாக்குறுதிகளை அள்ளிவிடுவது கட்சிகளின் வழக்கம்தான்

Advertisement