Advertisement

'டவுட்' தனபாலு

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: மது குடிப்பவர்களில் சிலருக்கு, காலையில் குடிக்கவில்லை எனில், நரம்பு தளர்ச்சி வந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரது உயிரை காப்பாற்றும் பொறுப்பு, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்களுக்கு உண்டு.

டவுட் தனபாலு: மதுவை கடுமையாக எதிர்த்து வந்த, பா.ம.க.,வே உங்களிடம் மண்டியிட்டு சரணாகதி அடைஞ்சிடுச்சு... அந்த துணிச்சலில், இப்படி எல்லாம் பேசுறீங்களோ... அப்புறம் என்ன... மதுக்கடை பதாகைகளில், 'இங்கே உயிர் காக்கும் திரவம் விற்கப்படும்'னு, எழுதிப் போட்டு, 'நோயாளி'களுக்கு, இலவச 'மருந்து' வினியோகத்தை துவக்கிட வேண்டியது தானே... இந்த அறிவிப்பை எப்போ வெளியிடப் போறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!

lமீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., படுதோல்வி அடையும் என்று, மு.க.அழகிரியே கூறியுள்ளார். அவ்வாறு நடக்கும்போது, அவர் அந்த கட்சியின் தலைவராவது நிச்சயம் நடக்கும்.


டவுட் தனபாலு: அடுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி சொல் மீது, உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கா... அப்படீன்னா, உங்களோடு சில காலம் இருந்து, உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்த, தினகரன், 'ஆட்சி போனதும், அ.தி.மு.க., எங்க பக்கம் வரும்'னு, சொல்வதும் நடக்கும்னு எடுத்துக்கலாமா என்ற, 'டவுட்'டை கிளப்புறீங்களே...!

lபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடந்த எட்டு ஆண்டுகளாக, அ.தி.மு.க., நல்லாட்சியை கொடுத்து வருகிறது. மக்கள் முகம் சுளிக்கவில்லை. சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

டவுட் தனபாலு: இப்படிப்பட்ட ஆட்சி மீது வாய் கூசாமல் எவ்வளவு களங்கம், அவதுாறு, ஊழல் குற்றச்சாட்டு, வழக்குகளை நீங்க போட்டிருப்பீங்க... இப்பவாவது ஓடிச்சென்று, கவர்னரிடம் கொடுத்த புகார் பட்டியலை திரும்பப் பெறுவீங்களா... அது தான், கூட்டணியில் அதிக, 'சீட்' பெற்றதற்கான, சரியான பிராயச்சித்தமாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை..

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பெரிய பெட்டியாக வாங்கிக்கிட்டா இப்படித்தான் சொன்னதெல்லாம் மறந்துடுமே மருத்துவர் ஐயா

  • தும்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    “மது குடிப்பவர்களில் சிலருக்கு, காலையில் குடிக்கவில்லை எனில், நரம்பு தளர்ச்சி வந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரது உயிரை காப்பாற்றும் பொறுப்பு, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்களுக்கு உண்டு....” அதே போல பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அவர்கள் அப்படிச் செய்யவில்லை எனில் பைத்தியம் பிடித்து... அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்..... அவர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பும் உண்டு என்று சொல்வாரோ..... அமைச்சர்....???

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கவர்னரிடம் சென்ற புகார் எப்போதோ குப்பைக்கூடைக்கோ, பழைய பேப்பர்காரருக்கோ போயிருக்கும் ‘நானா, புகாரா .. அப்படி ஏதும் கொடுக்கவில்லையே’ என்பார் மருத்துவர் ஏழு பிளஸ் ஒன்று பிளஸ் ........ பேசும்

Advertisement