Advertisement

அன்பு நிறைந்த சிரிப்புக்கு ஈடு இல்லை!

மணமகளுக்கு அழகு, 'டிப்ஸ்' கூறும், பிரபலங்களின் தோல் பராமரிப்பு நிபுணரான, டாக்டர் சைத்ரா வி.ஆனந்த்: திருமணம் என்பது, வாழ்வில் மிக முக்கிய தருணம். அன்று, மணமக்கள் மிளிரும் சருமமும், பிரகாசமான கூந்தலும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டு இருக்க விரும்புவர். அதற்காக, கடைசி நேரத்தில், 'ஸ்பா'க்களுக்கு படையெடுப்பது, நல்ல முடிவை நீண்ட நாட்களுக்கு தராது.முகூர்த்த நாளுக்கு, 3 -- 6 மாதங்கள் முன்பே, மணமகள் தயாராக வேண்டும்; குறைந்தது ஆறு வாரங்களாவது, முன்தயாரிப்பு தேவை.திருமணத்துக்கு, மூன்று மாதங்களுக்கு முன், சரும மருத்துவரை சந்தித்து, உங்கள் சருமத்துக்கேற்ற, முகப்பொலிவுக்கான, 'லேசர், பாடி ஸ்கல்ப்டிங், மைக்ரோ டெர்மாப்ரேஷன், மசாஜ், பேஷியல்' சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.அரிசியின் தவிட்டு மாவு, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாக்குவதுடன், அழுக்கு, எண்ணெய் பசையை நீக்கும்; முக தழும்புகளை மறைக்கும். தவிட்டுடன், பால் மற்றும் ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவலாம்.ஒரு மாதத்துக்கு முன், சருமத்துக்கான, 'மெடி பேஷியல்' செய்து கொள்ளலாம். அதில், பழச் சாறுகள் மற்றும் எண்ணெய் என, இயற்கை பொருள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். வீட்டிலேயே எனில், எலுமிச்சை சாறுடன், பால் சேர்த்து முகத்தில் தடவி, சில நிமிடம் கழித்து கழுவலாம். வாரம் இரண்டு முறை இப்படி செய்தால், சருமத்தின் இறந்த செல் நீங்கி, புதிய செல் உருவாவதால், முகம் பொலிவாகும்.இரண்டு வாரங்களுக்கு முன், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மறைக்கவும், அழுக்குகளை நீக்கவும், நுண்துளை அழுக்கு நீக்க சிகிச்சை சிறந்தது. கற்றாழை கூழை முகத்தில் தேய்த்து, சில நிமிடம் உலரவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவினாலும், சருமம் மென்மையாகும்.ஒரு வாரத்துக்கு முன், 'மெடி பேஷியல்' மட்டுமே போதுமானது. இது, தேனிலவு வரையிலான அடுத்த மூன்று வாரங்களுக்கு, முகப்பொலிவை தக்கவைக்கும். வீட்டிலேயே எனில், தலா இரண்டு டீஸ்பூன், முல்தானி மட்டி மற்றும் கிராம்பு எண்ணெய், தலா ஒரு டீஸ்பூன் சந்தனத்துாள், வேப்பிலை விழுது கலந்து, பரு இருக்கும் இடங்களில் மட்டும் தடவி, உலரவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.மூன்று நாட்களுக்கு முன், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது ஏழு மணி நேர ஆழ்ந்த துாக்கம் அவசியம்.அன்பு நிறைந்த சிரிப்பை, எப்போதும் முகத்தில் வைத்து இருங்கள். அதைவிட சிறந்த தெரபியோ, சிகிச்சையோ கிடையாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement