Advertisement

இதே நாளில் அன்று

மார்ச் 21, 1923 பொள்ளாச்சி, நா.மகாலிங்கம்:
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், நாச்சிமுத்து கவுண்டர் - ருக்மணி தம்பதிக்கு மகனாக, 1923, மார்ச் 21ல் பிறந்தார். சென்னை, கிண்டி பொறியியல் கல்லுாரியில், இயந்திர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். பஸ் கம்பெனி உள்ளிட்ட, பல்வேறு தொழில்களை கவனித்து வந்த மகாலிங்கம், தீவிர அரசியலில் இறங்கினார்.கடந்த, 1952ல் நடந்த, முதல் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின், 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல், தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காக, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பணிகளில், வாழ்க்கையை அர்ப்பணித்தார். 'சக்தி' குழுமத்தின் தலைவராக இருந்தார். 'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள மகாலிங்கம், 2014, அக்., 2ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    😂😂😂😂

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திரு மகாலிங்கம் ஐயா அவர்கள் நிர்வாகத்தைப்பற்றி பலநூல்களை எழுதியுள்ளார் எட்டுகோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மராட்டிய அரசு குறைந்த அளவு ஊழியர்களை வைத்து நிர்வாகத்தை நன்றாக நடத்துகிறது அதைவிட குறைவான மக்கள்தொகைக்கொண்ட தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் தொகை பலமடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார் அந்த நூல்களை தினமலர் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டுகிறேன் நல்ல நூல்கள் அவை

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சிறந்த காந்தியவாதியான ஐயா மகாத்மா காந்தி பிறந்த நாளில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது

Advertisement