Advertisement

உள்ளந்தோறும் வள்ளுவம்





தேனியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி சித்பவாநந்த ஆச்ரமம் நிறுவனரான பூஜ்ய ஒங்காரநந்தா ஸ்வாமி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக திருக்குறள் ஆராய்ச்சியை மேற்கொண்டு குறட்பாக்களின் உள்ளார்ந்த கருத்துக்களை கற்ப்பித்து வருவதுடன் குறளை உலகத்தமிழர்கர் அனைவருக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.



இதற்காக உலகத்தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம் என்ற அமைப்பினை துவக்கியுள்ளார் இதன் யுட்யூப் சானல் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழா திருக்குறளை உயர்த்திப்பிடித்த அருமையான விழா



பள்ளி மாணவியரின் குறட்பா வாழ்த்துடன் நிகழ்வு துவங்கியது.திருக்குறளின் அருமை பெருமைகளை விளக்கிய ஒங்காரநந்தா சுவாமி தொடர்ந்து திருக்குறளை பாராயணம் செய்யும் அருமையான நிகழ்வை நடத்தினார்.



இந்த நிகழ்வு இது வரை எங்கும் நடந்திராதது இதற்காக அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் இலவசமாக கொடுக்கப்பட்டது.அனைத்து குறள்களையும் மொத்த அரங்கமும் சத்தமிட்டு வாசித்து மகிழ்ந்தது.

குறளில் இல்லாததும் சொல்லாததும் ஏதுமில்லை இதன் குடிசைகளுக்கு கொண்டு செல்லுங்கள் நாள்தோறும் துாங்குவதற்கு முன் பத்து குறள்களையாவது சொல்லிவிட்டு துாங்கச் செல்லுங்கள் என்றெல்லாம் கேட்டுக்கொள்ளப்பட்டது பின் இதற்கான யூட்யூப் சானல் துவங்கப்பட்டது.

தினந்தோறும் திருக்குறள் அருளுரையை வாட்ஸ் அப் வாயிலாகவும் கேட்கலாம் அதற்காக எண்:77082 11196 இந்த எண்ணுக்கு பேசமுடியாது உங்கள் ஊர் பெயரையும் வாட்ஸ் அப் எண்ணையும் இந்த எண்ணுக்கு அனுப்பினால் தினமும் திருக்குறள் அருளுரையை கேட்கலாம்.

-எல்.முருகராஜ்

murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement