சுகாதாரம் காக்க இயக்கமாக மாற வேண்டும்!
குன்னுார்:குன்னுார் பாரதிய வித்யா பவன் சார்பில், 'குலபதி முன்ஷி' விருது வழங்கும் விழா நடந்தது.அணு ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் பத்மவிபூஷன் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ''நாட்டில் துாய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாறி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது குன்னுாரில் நடத்துவதை போன்று, தன்னார்வலர்கள் அதிகம் பேர் சேர்ந்து மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டால், சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழும்.'' என்றார்.முன்னதாக உறுப்பினர் ஸ்ரீமதி ஸ்ரீதர் கூறுகையில், ''நீலகிரியில் கடந்த 1938ம் ஆண்டில் குலபதி முன்ஷியால் துவக்கி வைக்கப்பட்ட பாரதிய வித்யா பவன் தற்போதும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குலபதி முன்ஷி விருது இந்த ஆண்டு 'கிளீன் குன்னுார்' அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.'' என்றார்.விருதை அமைப்பின் நிறுவனர் சமந்தா பெற்றுக்கொண்டார். விழாவில், கமிட்டி உறுப்பினர் மீனாட்சி வெங்கட்ராமன் மற்றும் ரோட்டரி கிளப் லயன்ஸ் கிளப், குன்னுார் வியாபாரிகள் சங்கம், சிட்டிசன்ஸ் பாரம் அமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர். துணைத் தலைவர் கிவிராஜ் சன்செட்டி நன்றி கூறினார்.அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வசந்தன் பேசுகையில், ''தன்னார்வ அமைப்புகள் அரசால் எந்தெந்த பணிகளை கடினமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதோ அந்த பணிகளை எளிமையாக்க தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செய்து வருகிறோம். தன்னார்வலர்களின் பணியை காண்பவர்கள் பொறுப்புணர்வை உணர்ந்து குப்பை கொட்டுவதை யோசிக்கின்றனர்.'' என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!