Advertisement

மசூத்அசாரை விடுவித்தது ஏன் ?- அமித்ஷா விளக்கம்

புதுடில்லி : கந்தகார் விமான கடத்தலின் போது பயங்கரவாதி மசூத் அசாரை விடுவிக்க சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தான் ஒப்புதல் தெரிவித்தனர் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


கந்தகார் விமான கடத்தலின் போது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை பா.ஜ., அரசு விடுவித்ததாலேயே இப்போது புல்வாமா தாக்குதல் நடந்ததாக காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டி இருந்தார். கந்தகார் விமா கடத்தல் தற்போது அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
அமித்ஷா தனது வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில், கந்தகர் விமானம் கடத்தப்பட்ட உடன் பிரதமர் வாஜ்பாய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விமானத்தில் பயணித்த பயணிகளின் உயிர் முக்கியம் என்ற ஒருமித்த கருத்துக்களை தெரிவித்தன. மசூத் அசாரை விடுவித்து, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க அனைத்துக்கட்சிகளும் ஒப்புக் கொண்டன. இது சரியான முடிவு இல்லை தான். ஆனால் வேறு வழி இல்லாததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பிணை கைதிகளை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. துரதிஷ்டவசமாக, மசூத் அசாரை பா.ஜ., அரசு விடுவித்தது ஏன் என கேள்வி எழுப்பி மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். 2010 ல் காங்., 2வது முறையாக ஆட்சியில் இருந்த போது 25 கொடூரமான பயங்கரவாதிகளை விடுதலை செய்தது ஏன் என காங்., தலைவர்கள் நாட்டிற்கு சொல்லலாமே.
அவர்களில் ஒருவன் தான் பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான ஷாகித் லதிப். கந்தகார் கடத்தலை தேர்தல் பிரசாரத்தில் பிரச்னையாக கிளப்ப ராகுல் விருப்பினால், கடத்தப்பட்ட மத்திய அமைச்சர் முப்தி முகம்மது சையத்தின் மகள் ருபையா சையதை மீட்க 10 பயங்கரவாதிகளை விடுவித்ததையும் பேசட்டும். இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (44)

  • Mohan Nadar - Mumbai,இந்தியா

    அரசில் வாதிகளை காப்பாத்த வாஜிபை செய்த 2 ஆவது முட்டாள்தனம்

  • Rajavel - Ariyalur,இந்தியா

    காங்கிரஸ் மக்களிடம் விளக்கவேண்டும்

  • Karikalan Govind - Chennai,இந்தியா

    அன்றைய காலகட்டத்தில் 150 பயணிகளை விடுவிக்க மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங் காந்தகார் சென்று முயற்ச்சித்தார். வேறு வழியின்றி தான் தீவிரவாதியை விடுவிக்க வேண்டி வந்தது. இந்த அளவு காங்கிரஸ் கூட. நிச்சயம் செயல் பட்டிருக்காது. அது தான் உண்மை.

  • krish - chennai,இந்தியா

    காங்கிரஸ் சோனியா, ராஹுல்க்கு நெத்தி அடி. இந்த மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?... மானங்கெட்ட காங்கிரஸ் வாரிசுகள். சோனியா பரம்பரை நாட்டை கெடுத்து சீரழித்தது போதும். இனியும் தாங்காதய்யா, இந்த பாரத புண்ணிய பூமி....

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இந்திய மக்களுக்கு , காங்கிரசின் அராஜக போக்குகள் , சரியாக விளக்கப்படவில்லை. அதே போல பி ஜெ பி அரசின் சாதனைகளும் விளக்கப்படவில்லை.

" "
Advertisement