Advertisement

திரிணமுல் காங்., மூத்த தலைவர், பா.ஜ.,வுக்கு ஓட்டம்

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, அர்ஜுன் சிங், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது.

அதிருப்தி




இங்கு, திரிணமுல், காங்., சார்பில், பட்பரா தொகுதி, எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்து வருபவர், அர்ஜுன் சிங்.இவர், வரும் லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தின் பாரக்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை
யிடம் விருப்பம் தெரிவித்தார்.'அந்த தொகுதியில், தற்போதைய, எம்.பி., தினேஷ் திரிவேதியே மீண்டும் போட்டியிடுவார்' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம்
அறிவித்தார்.இதையடுத்து, அதிருப்தி அடைந்த, அர்ஜுன் சிங், பா.ஜ., மூத்த தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் நேற்று இணைந்தார். இது குறித்து அர்ஜுன் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மம்தா பானர்ஜியின்விசுவாசியாக, 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். பாகிஸ்தானின் பாலகோட்டில், இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து, மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியது, எனக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

சமரசம்




தேசமே ஒன்று சேர்ந்து, பாக்.,கிற்கு எதிராக குரல் எழுப்பும் போது, மம்தாவின் கேள்வி துரதிர்ஷ்டவசமானது. அரசியலில் நல்லது, கெட்டது எதுவுமே கிடையாது. அரசியல் என்றாலே சமரசம் தான்.பாரக்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி., தினேஷ் திரிவேதி மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே தான், அத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். பா.ஜ.,வில் இணைந்தது, மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.a

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பள்ளத்தை பார்த்து நீர் ஓட தான் செய்யும்... இங்கே பணம்பதவியை தேடி அரசியல்வாதி ஓடுகிறான்

  • சீனு, கூடுவாஞ்சேரி - ,

    பாஜக கட்சி மாறிகளைக் கொண்ட கட்சி. என்பதில் ஒருவித சிறுமையுமில்லை. தாய் நாடே உயர்ந்தது அதுவே முதன்மை என்ற சிந்தனை உள்ள கட்சி.

  • கைப்புள்ள புதியஐ.டி - NJ,யூ.எஸ்.ஏ

  • blocked user - blocked,மயோட்

    ஓவியங்கள் பற்றி ரகசியங்களை உலகுக்கு சொல்லவேண்டும்...

    • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

      ஓவியங்கள் எதுக்கு ஓவியரை பற்றியே தெரிஞ்சுக்கணும்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பாஜக பேரை கட்சி தாவியோர் கட்சின்னு மாத்திடலாம்.. வானர சேனையுடன் நல்ல நேர்த்தியான தொடர்பு.

" "
Advertisement