Advertisement

பதற வைக்கும் பாலியல் பயங்கரத்தில்... அடுத்தது என்ன?

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் இருந்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த வழக்கில், முன்பு குளறுபடி, முறைகேட்டில் ஈடுபட்ட கோவை, பொள்ளாச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் காத்திருக்கிறது.

பொள்ளாச்சி, கல்லுாரி மாணவிக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோக்கள், போட்டோக்களுடன் கூடிய லேப்டாப், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், ஆறு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் விசாரணையில் நடந்த குளறுபடிகள், முறைகேடுகளைத் தொடர்ந்து மாநில அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., ஸ்ரீதர் தலைமையில், எஸ்.பி., நிஷா மற்றும் போலீசார் குழு, நேற்று முன்தினம் பொள்ளாச்சி வந்து விசாரணையை துவங்கினர். ஆனைமலை அருகே, சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டை உடைத்து லோக்கல் போலீசார் சோதனை நடத்தியதையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

அரசின் பரிந்துரையை சி.பி.ஐ., இயக்குனர் ஏற்றுக்கொண்டு விசாரணையை துவங்கும் போது, பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியில் வந்த, ஆளுங்கட்சி மாஜி நிர்வாகி 'பார்' நாகராஜ், மற்றும் மாணவரணி, சிறுபான்மையினர் பிரிவில் பொறுப்பு வகிக்கும் சிலர் இவ்வழக்கில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள், ஏராளமான பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்; அதையும் அவர்களே ஒப்புக்கொண்டு வீடியோவில் பேசியுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் விபரங்களை போலீசார் சேகரிக்கவில்லை; மேலும், அவர்களிடம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் பெறுவது; குற்றவாளிகளை கஸ்டடியில் எடுத்து விசாரித்து முழு பின்னணியையும் கண்டறிந்து வழக்கின் ஆதாரங்களை திரட்டுவது போன்ற நடவடிக்கைகளை முறையாக செய்யவில்லை என, டி.ஜி.பி.,க்கே எண்ணற்ற புகார்கள் சென்றன. அதன்பிறகே, வழக்கின் விசாரணை தற்போது அதிரடியாக சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், புகார் கொடுத்த பெண், உறவினர்கள், நண்பர்களை அழைத்து, சி.பி.சி.ஐ.டி., அல்லது சி.பி.ஐ., விசாரிக்கும் போது, என்ன சொல்ல வேண்டும், எவ்வாறு வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என, பயிற்சி அளித்து, 'ரிகர்சல்' பார்க்கும் பணியில் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் தெரிவிக்கலாம்; சி.பி.சி.ஐ.டி., அறிவிப்பு


பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகள் போலீசாரிடமிருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. எஸ்.பி., நிஷா பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

சி.பி.சி.ஐ.டி., நேற்று வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகார், தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்படும். வழக்கு தொடர்பான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் இருப்பின், 94884 42993 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம். கோவை, அவிநாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேரிலும் தெரிவிக்கலாம். வழக்கின் முக்கியத்துவம், பாதிக்கப்பட்டவர்களின் நலம் கருதி வழக்கு தொடர்புடைய படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்; எச்சரிக்கிறது உளவுத்துறை


பொள்ளாச்சி விவகாரம் மாணவர்கள் மத்தியில் மாநில அளவிலான போராட்டமாக வெடித்துள்ளது. கல்லுாரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ, மாணவியர் தினந்தோறும் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென இவ்வளவு பெரிய அளவில் கிளர்ச்சி ஏற்பட்டது எப்படி என, உளவு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மாணவ மாணவியரை போராட்டத்திற்கு துாண்டி, வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில், 'மாவோயிஸ்ட்'கள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதை, உளவு போலீசார் கண்டறிந்துள்ளனர். 'பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு போலீஸ் துறையாலும், நீதித்துறையாலும் தீர்வு கிடைக்காது என்றும்; போராட்டத்தின் வாயிலாகவே தீர்வு கிடைக்கும் ' என்றும், நோட்டீஸ் வெளியிட்டு மாணவ, மாணவிகளை மூளைச்சலவை செய்யும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை போலீஸ் உளவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மாவோயிஸ்ட்கள், வன்முறை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது. அதனால், பாலியல் வழக்கு குற்றவாளிகளை கோர்ட்டிற்கு அழைத்து வரும்போது, அவர்கள் மீது தாக்குதல் நடக்காதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட,பாதுகாப்பு போலீசாரை உஷார்படுத்தியுள்ளோம். மாணவர்களின் போராட்டம், அமைதி வழியில் இருந்தால் பிரச்னை இல்லை. மாவோயிஸ்ட்களின் துாண்டலால் வன்முறைப் பாதைக்கு மாறிவிடக்கூடாது' என்றார்.
கோவையில் மறியல்: கோவை சட்டக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை, கல்லுாரி வளாகத்தின் முன்பு பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகளை தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மறியல் செய்தனர். பேரூர் டி.எஸ்.பி., பாலமுருகன், மாணவர்களுடன் பேசி கலைந்து செல்ல வலியுறுத்தினார். அதன்பின் நடந்த மனித சங்கிலியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

5 ஆண்டுகளில் 82 தற்கொலைகள்! பொள்ளாச்சி, வால்பாறை போலீஸ் சரகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 30 வயதுக்கு உட்பட்ட, 82 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பள்ளி, கல்லுாரி மாணவிகள், 28 பேர் என, போலீஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் தற்கொலைக்கு, படிப்பில் கவனம் செலுத்த முடியாதது, குடும்ப பிரச்னை, வயிற்றுவலி, பெற்றோர் கண்டித்தது என, காரணங்கள் கூறப்படுகின்றன. தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் உள்ளதால், வெளியில் தெரிவிக்க முடியாத 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா என, விசாரிக்க வேண்டுமென, மகளிர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
'அது... நானல்ல!' சொல்வது நாகராஜ்: பொள்ளாச்சியில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியது தொடர்பாக, அ.தி.மு.க., பிரமுகர், பார் நாகராஜ் கைது செய்யப்பட்டார். இதன்பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பார் நாகராஜூக்கு பாலியல் துன்புறுத்தலில் தொடர்பு இருப்பது தெரிந்தும், போலீசார் அவரை தப்பிக்க வைக்க உதவி வருகின்றனர். இந்நிலையில், பார் நாகராஜ், தன் தாயார் பேபி ஆறுமுகத்துடன் வந்து நேற்று கோவை கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இதன் பின், நாகராஜ், நிருபர்களிடம் கூறுகையில்: 'ஆபாச வீடியோவில் இருப்பது நானல்ல; சதீஷ்,' என்றார். கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'ஆபாச வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
குற்றவாளிகளை துாக்கிலிடு! உடுமலையில் மாணவியர் ஆவேசம்: உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி மாணவியர் ஆயிரத்துக்கும் அதிகமானோர், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வரை, பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்டனர். 'பாதிக்கப்பட்டபெண்களுக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகளை துாக்கிலிட வேண்டும்' என, கோஷமிட்டனர். திருப்பூர் ஏ.டி.எஸ்.பி., முருகசாமி, உடுமலை டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, நான்கு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவியர் கூறுகையில், 'குற்றவாளிகளை சிறையில் அடைப்பதும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் வெறும் கண்துடைப்புதான். இந்த பிரச்னையை விரைந்து விசாரித்து அனைத்து குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனை அளிக்க வேண்டும்,' என்றனர். உடுமலை, அரசு கலைக்கல்லுாரியிலும் மாணவர்கள், இரண்டாவது நாளாக, வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பல மணி நேர பரபரப்பு நிலவியது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (113)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  சிலவிஷமிகள் தங்களின் கருத்துக்கள் மூலமாக ஊடுருவி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது ..கருத்துக்கள் கூறியுள்ள விஷமிகளிடம் விசாரணை நடத்துவது மேலும் வழக்கிற்கு வலு சேர்க்கும் . விஷமிகள் கலையப்படவேண்டும்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  பிஜேபி க்கு வலுவா இல்லாததால் இந்த அதிமுக கூடைகூட்டுவச்சானுகளே என்று தினம் நான் பொலம்பிண்டுருக்கேன் தைரியமா தனியே நிக்கணும் திமுக அண்ட் அதிமுக லே ரெண்டுமே பிராடுகளே தான் மேக்சிமம் இருக்கானுக அரசியல் பின்னனிலே செய்யாத அநியாயம் காலே இல்லீங்க

 • varadarajan.a.v - chennai,இந்தியா

  பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  இப்போ திடீரென்று விழித்துக்கொண்டு நக்சலைட் , மாவோயிஸ்ட் என்று கூப்பாடு போடும் இந்த உளவுத்துறை 7 வருடங்களாக நடந்த கொடுமைகளை கண்டுபிடிக்காமல் யாருக்கு ஊது குழலாக இருந்தது ,மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக்களவாணிகள் .

  • Anandan - chennai,இந்தியா

   இதைவிட இந்த பிஜேபி ஆட்கள் இப்படி ஒன்று நடக்கவே இல்லை இது ஒரு சதிச்செயல்ன்னு கூவுறது பார்த்த இவங்க தேஷ்பக்தி தெளிவா விளங்குது.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  திமுகவினதும் கமால் ஹசான் மற்றும் தினகரன் போன்றோர்களின் அரசியல் கபட நாடகங்களுக்கு, மாணவர்களும் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவங்களும் பலிக்கடாவாகி விடக்கூடாது. சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு ஏன் தேவையற்ற போராட்டங்கள்? நடுநிலை கொண்டவர்கள் எத்தனை பேர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்? ஏழு வருடங்களாக நிகழ்ந்த தொடர் சம்பவங்கள், எப்படிப் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் போனது என்பது வியப்பாக இருக்கின்றது.

  • அப்பாவி - coimbatore,இந்தியா

   என்ன சார் கேள்வி கேக்கறீங்க. பெற்றோருக்கு தெரியாமலா இருந்திருக்கும். காவல் துறைக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும். காம்பிளைன்ட் பெற்றுக்கொண்டு ஏன் நடவடிக்கை இல்லை?

  • Anandan - chennai,இந்தியா

   வைத்திலிங்கம், இப்படி கேள்வி கேட்பவனையெல்லாம் சதி செய்றாங்கன்னு சொல்லி செயலாற்ற நிர்வாகம் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கினால் இழப்பு மக்களுக்குத்தான் என்ற சிறிய விடயம் கூட தெரியாதவர்கள் தேசபக்தி பேசுறீங்க. காலக்கொடுமை.

" "
Advertisement