Advertisement

மோதல்! மதுரை ஆவினில் நிர்வாகத்திற்கு எதிராக .... 'மைக்' மூலம் ஒட்டு கேட்பதாக கொந்தளிப்பு

மதுரைமதுரை ஆவினில் பெண் ஊழியர்களை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட சிலருக்கு பொது மேலாளர் ஜெயஸ்ரீ துணையாக இருப்பதாக கூறி நேற்று அலுவலக பிரதான கதவை மூடியதோடு அதிகாரிகள், ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.கடந்த ஓராண்டாக ஜெயஸ்ரீக்கும், பெரும்பாலான ஊழியர்களுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை களங்கப்படுத்தும் வகையில் 'மொட்டை பெட்டிஷன்களை' உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதை கண்டித்து நேற்று பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து ஆவின் முன் ஒரு மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.அவர்கள் கூறியதாவது:ஆவினில் 2018, டிச.,ல் ஜெயஸ்ரீ பொறுப்பேற்றது முதல் மோதல் போக்கு நீடிக்கிறது. நிர்வாகத்தில் கணவர் அழகுராஜின் தலையீடு அதிகரித்துள்ளது. அவர் சொல்லும் கோப்புக்களில் கையெழுத்திட வேண்டும் என நிர்பந்திக்கிறார். இவருக்கு துறை அமைச்சரின் ஆதரவும் உள்ளதால் அழகுராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். பல நேரங்களில் நிர்வாக கார்களில்தான் அழகுராஜா பயணிக்கிறார். அவர், மதுரை காமராஜ் பல்கலை யில் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார். பல்கலைக்கு அலுவலக காரிலேயே பயணிக்கிறார். இதுகுறித்து போட்டோ ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.ஆவினில் மொத்தம் உள்ள 350 ஊழியர்களுக்கு ஓராண்டில் பலமுறை இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பாதிக்கும் வகையிலான நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு கோப்புக்கள் நிலுவையில் போடப்பட்டுள்ளன.
ஒட்டுக்கேட்கும் கருவி
பெண் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கம்ப்யூட்டரில் மைக்ரோ கேமரா பொருத்தியும், சிலரின் டேபிளுக்கு அடியில் மைக்ரோ ஸ்பீக்கர் வைத்தும் தனது அலைபேசியில் ஜெயஸ்ரீ கண்காணிக்கிறார். அவரை விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன. குறிப்பிட்ட சில பெண் ஊழியர்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலையில் மொட்டை பெட்டிஷனால் குடும்ப ரீதியாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.
முக்கிய கோப்புகள் தேக்கம்
இச்சம்பவம் குறித்து துணைப் பதிவாளர் (பால்வளம்) கணேசன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கருத்து கேட்க பொது மேலாளர் ஜெயஸ்ரீயை பலமுறை தொடர்புகொண்டும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. பொது மேலாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் பல்வேறு முக்கிய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக பால் மொத்த விற்பனை, கிராமங்களில் புதிய சொசைட்டிகளை உருவாக்குவது, ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான ஏராளமான கோப்புக்கள் மாதக்கணக்கில் நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனக்கே கணவர் தான் பதில் சொல்கிறார்ஆவின் தலைவர் சொல்கிறார்
ஆவின் தலைவர் ஓ.ராஜா கூறியதாவது: தலைவராக பொறுப்பேற்றது முதல் இப்பிரச்னை குறித்து என்னிடம் பலர் தெரிவித்து வருகின்றனர். பொது மேலாளரை அழைத்து பலமுறை அறிவுறுத்தினேன். ஆனாலும் பிரச்னைகள் நீடிக்கின்றன. அலுவல் பணி தொடர்பாக பொது மேலாளருக்கு நான் போன் செய்தாலே அவரது கணவர் தான் பதில் சொல்கிறார். 'அவரை அதிகாரம் செய்ய விடாதேம்மா'னு நானும் பலமுறை தெரிவித்துவிட்டேன். ஆவணங்கள் தேங்கி கிடக்கின்றன. பலருக்கு சம்பள பிரச்னை உள்ளது. என்னால் முடிந்த வரை ஆவினை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தனியார் நிறுவனங்களிடம் காசு பெற்றுக்கொண்டு ஆவினை குழிதோண்டி புதைப்பது என்னும் முடிவில் செயல்படுபவர்களை எதுவுமே செய்யமுடியாது

" "
Advertisement