Advertisement

'கலாம்' மண்ணில் களம் காணும் கமல்

லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா, சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி, பலத்தை பரிசோதிக்க கமல் முடிவு செய்துள்ளார். 'லோக்சபா தேர்தலில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன். தொகுதி எது என, பின்னர் அறிவிக்கப்படும்' என, 'சஸ்பென்ஸ்' வைத்தார்.

மதுரையில் கட்சி துவக்கிய அன்று காலை, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று, கமல் மரியாதை செலுத்தினார். அப்துல் கலாமின் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமல், அவரின் நினைவிடத்தில் இருந்தே, தன் அரசியல் பயணத்தை துவக்க விரும்பினார். இதனால் அவர், ராமநாதபுரம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். 'பரமக்குடி மண்ணின் மைந்தன்' என்ற அடிப்படையில், மக்களின் ஆதரவு கிடைக்கும் என, அவர் கணக்கு போட்டுள்ளார்.

'ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும்' என நிர்வாகிகள், தொண்டர்கள் பலர், கமல் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களை திருப்திபடுத்தவும், கமல் இம்முடிவை எடுத்துள்ளார். ஆக, ராமநாதபுரம் தொகுதியில் கமல் களம் காண்பது, ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

'சகுனி'யாக மாறுவாரா?


முதல் முறையாக தேர்தல் களம் காணும் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, பா.ஜ.,வை தேடப் போவதாக, செல்லும் இடங்களில் எல்லாம், கமல் கிண்டலாக கூறி வருகிறார்.

கமலுக்கும், நடிகர் கார்த்தி நடித்த சகுனி படத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அந்த படத்தில், கார்த்தியின் பெயர் கமல். அவரது சகுனி வேலையால், ராதிகா கவுன்சிலராகி, மேயராகி விடுவார். அந்த கட்சியின் சின்னமும், 'டார்ச் லைட்' தான். அதுபோன்ற தேர்தல் சூழல், தற்போது நிலவுகிறது. மக்கள் நீதி மையம் சார்பில், கமல் உட்பட பலர் வேட்பாளர்களாக களம் இறங்க உள்ளனர். 'கமலும், சகுனி பட கேரக்டர் போன்று, சில சகுனி வேலைகளை பார்த்தால் மட்டுமே, கரையேற முடியும்' என்கின்றனர், அவரது கட்சியினர்.

அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரு பெரும் கட்சிகளுடன், நேற்று பிறந்த எங்கள் கட்சி போட்டியிடுவது, கம்பி மேல் நடப்பதற்கு சமம். எச்சரிக்கையாக இந்த தேர்தலை அணுக வேண்டும். இல்லாத பட்சத்தில், 'துக்கடா' கட்சி பட்டியலில், மக்கள் நீதி மையமும் சேர்ந்துவிடும்.

கமல் நிற்கும் தொகுதியில், அவருக்கு வேண்டுமானால் கணிசமான ஓட்டுகள் விழலாம். ஆனால், மற்ற தொகுதிகளில்...? 'ஊழலை ஒழிப்போம்' எனக் கூறி நின்றால், 'நோட்டா'வுக்கு கிடைக்கும் ஓட்டுகள் கூட எங்களுக்கு கிடைக்காது. எனவே, இந்த தேர்தலில், சில சகுனி வேலைகளை பார்த்தால் மட்டுமே, குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெற முடியும். அதற்கு, கமலை சுற்றியுள்ள அறிவாளிகள், ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Tamilselvan - Chennai,இந்தியா

  திருட்டு முட்டாள் கட்சிகளுக்கு வோட்டை போட்டு வீண் ஆக்காமல் கமலுக்கு வாய்ப்பு தந்து பார்க்கலாம். மக்களுக்காக உழைப்பார். குடும்ப கொள்ளையர்கள் வேண்டாம்.

 • Santhosh V - bangalore,இந்தியா

  கமல்.... தமிழகத்தின் புதிய நம்பிக்கை. அவரை பயன் படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லது. காமராஜர் , சிவாஜிக்கு கொடுத்த தோல்வியை கமலுக்கு கொடுத்தால் நஷ்ட படுவது மக்கள்தான். மக்களே கமலுக்கு ஓரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். சிறப்பான செயல்பாடுகளால் தமிழகம் நிட்சயம் மேம்படும். மக்கள் திமுக , அதிமுக இரண்டையும் பார்த்துவிட்டார்கள் கருணாநிதி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி எப்படி என்றும் பார்த்தாகிவிட்டது ஒரு வித்தியாசமாக மக்கள் நீதி மையத்திற்கு சான்ஸ் கொடுத்தால் என்ன தவறு. எத்தனை நாளைக்குத்தான் இட்லி வடை சாப்பிடுவது ஒரு வித்தியாசமாக ருசியாக வேறு எதையாவது சாப்பிடலாமே.....

 • Tamil - Trichy,இந்தியா

  கமல்.... தமிழகத்தின் புதிய நம்பிக்கை. அவரை பயன் படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லது. காமராஜர் , சிவாஜிக்கு கொடுத்த தோல்வியை கமலுக்கு கொடுத்தால் நஷ்ட படுவது மக்கள்தான். மக்களே கமலுக்கு ஓரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். சிறப்பான செயல்பாடுகளால் தமிழகம் நிட்சயம் மேம்படும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ம நீ மையம் வாங்கும் வாக்குகள் அந்த கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  திமுக ஆதிமுகவிட்கு மாற்றாக வருவாரா என்பது இவருக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்து இருக்கிறது.

" "
Advertisement