Advertisement

மதுரையில் தேர்தல் தேதி மாற்றம் இல்லை; கமிஷன் பதிலால் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: சித்திரைத் திருவிழா தேரோட்டத்தன்று ஏப்.,18 மதுரையில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், 'தேதியை மாற்ற வாய்ப்பில்லை' என்ற தேர்தல் கமிஷனின் பதிலால் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அதிருப்தி அடைந்தது. இன்று (மார்ச் 15) பதில் மனு செய்யாவிடில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மதுரை வழக்கறிஞர் பார்த்தசாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் தேர்தல் ஏப்.,18 ல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஏப்.,15 ல் பட்டாபிஷேகம் மற்றும் தொடர் நிகழ்வாக ஏப்.,18 ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவை, ஏப்.,19 ல் காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நடக்கிறது. திருவிழாவில் தென்மாவட்டத்தினர் பங்கேற்பர்.

தேரோட்டம் நடக்கும் பகுதியில் ஓட்டுச்சாவடிகள் இடம்பெறும். உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய சிரமம் ஏற்படும். திருவிழாவில் அதிக போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர். வருவாய்த்துறையினர் திருவிழா பணியில் ஈடுபடுவர். அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது சிரமம். மதுரையில் வேறு தேதியில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பார்த்தசாரதி மனு செய்தார்.

நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள், 'ஏப்.,18 ல் தேரோட்டம், எதிர்சேவையில் பக்தர்கள் பங்கேற்று விட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று அதே நாளில் ஓட்டுப் பதிவு செய்வது இயலாத ஒன்று. இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் நுாறு சதவீத ஓட்டுப் பதிவு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஏப்.,18 ல் தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல் கமிஷன் மறு பரிசீலனை செய்து, வேறு தேதியில் நடத்தலாமா என்பதை பரிசீலித்து மார்ச் 14 ல் தேர்தல் கமிஷன் தெரிவிக்க வேண்டும்' என்றனர். நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

விவாதங்கள் வருமாறு:
தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: ஏப்.,19 ல் பொது விடுமுறை. இதை கருத்தில் கொண்டே ஏப்.,18 ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூடுதலாக ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தி, அமைதியாக தேர்தல் நடத்தப்படும். தேரோட்டத்திற்கு 2 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் நடக்கும் பகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மதுரை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பில்லை.

நீதிபதி: அப்படி எனில் தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்கலாமே?

தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருவிழாக்கள் நடக்கும். அதற்காக வெவ்வேறு தேதிகளில் மாற்றி தேர்தலை நடத்த முடியாது. திட்டமிட்ட தேதியை மாற்றினால் அது மற்ற மாநில தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீதிபதிகள்: நீங்கள் தேர்தல் நடத்துவதில்தான் ஆர்வமாக உள்ளீர்கள். திருவிழா அன்று அதில் பங்கேற்க மக்கள் விரும்புவார்களா அல்லது ஓட்டுப் பதிவு செய்ய வருவார்களா?


தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்: உளவுத்துறை அறிக்கை மற்றும் சில புள்ளிவிபரம் அடிப்படையில் தேர்தல் தேதியை முடிவு செய்தோம்.

நீதிபதிகள்: நீங்கள் உயர்மட்ட அளவில் முடிவு செய்துள்ளீர்கள். கீழ்மட்ட கள யதார்த்தத்தை கருத்தில் கொள்ளவில்லை. தேர்தல் கமிஷனின் முடிவில் பிடிவாதமாக உள்ளீர்கள். கீழே இறங்கி வந்து வாக்காளர்களின் நிலையை பற்றி யோசிக்கவில்லை. உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை. விழா பகுதிகளில் 59 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.

18 சாவடிகள் பதட்டமானவை. அந்த ஓட்டுச்சாவடிகளில் 200 மீ., துாரத்திற்குள் வாக்காளர்களைத் தவிர, வேறு யாரையும் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்கிறீர்கள். இந்த கட்டுப்பாட்டின்படி, ஓட்டுச் சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேரை பார்க்க வரும் பக்தர்கள் கூடுவதை தடுப்பீர்களா அல்லது ஓட்டுப் பதிவு செய்ய வருவோரை அடையாளம் கண்டு அனுமதிப்பீர்களா? உங்களுக்கு திருவிழா மற்றும் மக்களைப் பற்றி கவலை இல்லை.

மதுரையில் ஏப்.,18 தேர்தல் நடத்த எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? மதுரையில் திருவிழா அன்று தேர்தல் நடத்துவதற்கான திட்டமிடல், முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனுவை இன்று (மார்ச்15) தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும். இவ்வாறு எச்சரித்தனர்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (7 + 29)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    மதுரை மற்றும் அதன் சுற்று ப்பகுதி நகர கிராம வாக்காளர் கள் யாரும் பாஜகவுக்கு அல்லது அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே கமிஷன் கரெக்டா கோவில் திருவிழா அன்று தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. தேதியை மாற்ற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

  • natarajan s - chennai,இந்தியா

    ஒரு மாநில தேர்தல் ஆணையர் எல்லா மாவட்ட ஆட்சியரிடம்( அவர்தான் Returning Officer மற்றும் District Election Officer ) கருத்து கேட்ட பிறகே மத்திய தேர்தல் ஆணையருக்கு கருத்துரு அனுப்பி அதன் பின் தான் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேர்த்திருவிழா மற்றும் கள்ளழகர் எதிர்சேவை பற்றி தெரியாமலா report அனுப்பியிருப்பார்.? மாவட்ட தேர்தல் அதிகாரி (அரசின் அனுமதியோடுதான் ) அந்த நாட்களில் தேர்தல் நடத்த முடியும் என்று report கொடுத்திருப்பார்.அதனால்தான் இந்த முடிவு. மேலும் இது ஒரு பொது தேர்தல் அதனால் தேர்தல் schedule அறிவிப்பதற்கு முன் மாநில அரசு , மாநில தேர்தல் கமிஷனர் , மாவட்ட ஆட்சியர் எல்லோரும் ஒருமித்த கருதுக்குப்பின் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும். மக்களும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க முன் வரவேண்டும். இது ஒரு சமய சார்பற்ற நாடு (அப்படித்தானே எல்லோரும் கூவுகிறார்கள் ) எந்த மத திருவிழாவாக இருந்தால் என்ன வாக்களித்து விட்டுப்போய் சமய பணியை செய்ய வேண்டியதுதான்.அதுதான் இரண்டு மணிநேரம் கூடுதலாக அனுமதி என்கிறார்களே . இந்த கோரிக்கையை ஏற்றால் அடுத்துபுனித வெள்ளி, LENT ) ரம்ஜான் நோன்பு அடுத்து plus 2 result 10 th result அப்புறம் அட்மிஷன் கல்லூரி திறப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் தற்சமயம் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கிளம்பிவிடுவார்கள். குறித்த தேதியில் நடத்துவதே சரி.

  • Girija - Chennai,இந்தியா

    ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வெற்றிபெற்று மீதி தொகுதிகளில் ராஜினாமா செய்து இடை தேர்தல் வந்தால் அவரது ரத்த சம்பந்த உறவுகள் அத்தொகுதிகளில் போட்டியிடக்கூடாது என்ற தேர்தல் திருத்தும் கொண்டுவரவேண்டும் .

  • Girija - Chennai,இந்தியா

    தேர்தல் கமிஷன் பதினேழாவது பாராளுமன்ற தேர்தலிலும் தன் தவறை திருத்தி கொள்ளவில்லை, திருத்தங்கள் கொண்டு வரவில்லை. 1. ஒரு வேட்பாளர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும். 2. ஒரு வேட்பாளர் ஏற்கனவே பாராளுமன்றம் அல்லது ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தால் மணிலா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முன் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். பதிமூன்றாம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது காங்கிரசை சேர்ந்த ஒரிசா கிரிதர் கோமங்கோ பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று மாநில அரசியலுக்கு செல்வதாக அறிவித்துவிட்டு, பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார், வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது கலந்துகொண்டு ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார், அவரது ஒற்றை ஓட்டால் அதாவது ஒரே ஒரு ஓட்டால் வாஜ்பாய் அரசு கவிழந்தது மறு தேர்தல் வந்தது. இந்த இரு பிரச்சனைகளுக்கு இதுவரை தேர்தல் கமிஷன் விடை காணவில்லை. இந்த லட்சணத்தில் காகித ஒட்டு சீட்டு (நடைமுறையில் சாத்தியம் இல்லை அதுவும் இவர்களது தற்போதைய பணித்திறனை பார்க்கும்போது ) கொண்டு வந்தால் மரங்கள் அளிக்கப்படுமாம் சுற்று சூழல் பாதிக்கப்படுமாம். ஊரானுக்கு உபதேசம், ஓட்டைகளை அடைக்காமல் தேர்தல் நடத்தி மறு தேர்தல் வந்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் .

  • Girija - Chennai,இந்தியா

    டி என் சேஷன், கோபால்சாமி போன்றோர் மற்றும் தமிழக முன்னால தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா போன்றோர் வழிநடத்திய தேர்தல் ஆணையம் இந்த அளவிற்கு பணித்திறன் குறைவாக இருக்கும் என்று மக்கள் ஒருவர் கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.

மதுரை தொகுதி தேர்தல் தேதியை மாற்ற மறுப்பு (29)

  • ஆப்பு -

    நடக்கப் போவது இந்து கோவில் திருவிழா. இந்துக்கள் வாக்களிக்கலைன்னா அதிமுக, பா.ஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பாதிப்பு.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      அப்பிடீங்கிறீங்க? எனக்கி அப்பிடி தோனில்லா..

  • J.Isaac - bangalore,இந்தியா

    திட்டமிட்டே தேர்தல் கமிஷனால் அரசு துணையுடன் நடத்தப்படுகின்ற நாடகம். வியாழன் வெள்ளி கிறிஸ்தவர்களுக்கு முக்கிய தினம் என்று தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா? மொத்தத்தில் குழப்பத்தை உருவாக்கி அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறார்கள்.

  • Sathyanarayanan Sathyasekaren -

    who is this lawyer for election.commission? his motive is suspecting. when he know can not be 100 why he not accept the reality and advise the election commission to revise the date.

  • சீனு, கூடுவாஞ்சேரி - ,

    இந்த தீயசக்திகளின் ஆதரவாளர்கள் மதுரையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்க ஒப்பாரி வைக்கும் போது இதில் ஏதோ வில்லங்கம் இருப்பது போல தெரிகிறது.

  • David Thomas - Tirunelveli,இந்தியா

    சித்திரை திரு விழா 3 நாட்கள் தெருவில் நடப்பதுகூட கஷ்டம். அரசு அலுவலர்கள் முந்தின நாளிலே ஆயத்தம் செய்யவேண்டும். தேர்தல் கமிசன் வீம்பு செய்யாமல் தேதியை தள்ளி வைக்கவேண்டும். சட்டம் ஒழுங்கு மிக பெரிய சவால் ஆகிவிடும். சுற்றுப்புற கிராம மக்கள் மதுரையில் இருப்பார்கள். அவர்கள் எப்படி வோட்டு போடமுடியும் ? தமிழ் நாட்டை பற்றி ஒன்றுமே தெரியாத ஒன்றுக்கும் கவலைப்படாத தலைமை தேர்தல் அதிகாரி .

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      அதானே வேணும். மக்கள் ஓட்டு போட்டா பிரச்சினையாச்சே.

  • சீனு, கூடுவாஞ்சேரி - ,

    இதில் வேடிக்கை என்னவேன்றால் இந்த நாத்திக கும்பல் தெருவுக்கு தெரு என்று எங்கும் இந்துக்களையும் இந்து மதநம்பிக்கையையும் இழிவுபடுத்திவருபவர்கள் கோயில் திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமாம். என்ன கொடுமையடா சாமி. உனக்கு மைனாரி ஓட்டுத்தானே முக்கியம் அவர்கள் மகிழ்ச்சியாக வந்து ஓட்டு அளிப்பார்கள். உங்களின் வெற்றி உறுதி. இந்துக்களின் ஓட்டு உங்களுக்கு தேவையில்லை. பிறகென்ன ஆர்ப்பாட்டம். அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தமோ அதே தான் திமுகாவிற்கும் சித்திரை திருவிழாவிற்க்கும்.

  • spr - chennai,இந்தியா

    எங்க வீட்டிலே காது குத்துத் திருவிழா, அவங்க ஆத்தா செத்துப் போயிட்டா மாமா பொண்ணுக்கு பூப்படைவு திருவிழா - இதுக்கெல்லாம் எங்க உறவு முறை சுத்துப் பட்டு எட்டு கிராமத்திலிருந்தும் வருவார்கள் எனவே என்னக்கு எவர் வீட்டிலேயும் எந்த வித நல்லது கேட்டது இல்லையோ அன்னைக்கித்தான் தேர்தல் நடத்தணும் - இப்படியெல்லாம் கூட கோரிக்கைகள் வரும் நீதிபதிகள் அன்றாட அலுவல்களில் தலையிடுவது சரியல்ல இதனை ஏற்றால், நாளையே இஸ்லாமியர்கள் பிறகு கிருத்தவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் விழாக்களைக் காட்டி தேர்தலை தள்ளிப்போடுவார்கள் பிறகு ஒரேயடியாக தேர்தலே நிறுத்தப்படும் இன்னமும் சென்னை மாநகர ஆட்சி தேர்தல் நடத்தப்படவில்லை நினைவிருக்கட்டும்

  • Lourdu Irudayaraj - coimbatore,இந்தியா

    அதே போல அன்றைய தினம் கிறிஸ்துவ மக்களுக்கும் முக்கிய வழிபட்டு நாள் (பெரிய வியாழன் /பெரிய வெள்ளிக்கிழக்குக்கு முதல் நாள் தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் .இதையெல்லாம் ஆராயம்மாள் தேர்தல் கமிசன் தேதியை எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை .தேதியை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யவும் .

  • S.kausalya - Chennai,இந்தியா

    ஓட்டு போட யாரும் வரா விட்டால் ,அல்லது 5 விழுக்காடு ஓட்டு மட்டுமே பதிவாகும்.. இது ஒரு சாதாரண கோரிக்கை தான். மக்கள் தங்களின் ஜன நாயக கடமையை செய்யவும் வேண்டும், அதே சமயம் ஆண்டுஆண்டு காலமாக இருந்து வரும் தங்களின் நம்பிக்கையையும் காக்க வேண்டும். கடவுளை நாளைஆற்றில் இறங்கும்படி சொல்ல முடியாது. அதற்கென உள்ள கால நேர திதி படி தான் உத்ஸவம் நடக்க வேண்டும். தேர்தல் கமிஷன் உள்ளூர் அதிகாரியிடம் கேட்டு இருக்கவேண்டும்.

  • அன்புச்செல்வம் - Madurai,இந்தியா

    என்னிக்கு வச்சா என்ன? நான் பிஜேபி-அதிமுக வுக்கு பொத்தானை அமுக்கிட்டு வந்துகிட்டே இருப்பேன்.

  • Ram RV -

    Another stupid decision by ignorant North Indian babus. Madurai Chithirai festival is as huge and as important as Puri Jagannath Rath Yatrra. Will any babu dare to keep election on that day in Puri?

  • E.V. SRENIVASAN - Muscat,ஓமன்

    ஹிந்து பண்டிகை என்றால் மத மாற்றிய நாதாரிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது போல. இதில் தேர்தல் ஆணையமும் கூட சேரக்கூடாது. இது ஒருதலை பட்சமாகும். எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்தினை ஆதரிக்க கூடும்.

  • Ashok ,India - India,இந்தியா

    கோவில் திருவிழாக்கள் சம்பிரதாய முறைப்படி நடக்கக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது . ஆனால் தேர்தல் தேதியை மாற்ற முடியும். தென் மாவட்டங்கள் முழுவதுமே சித்திரை திருவிழாவில் நிற்கும் பொது எதெற்கு இப்படி அரசு அதிகாரிகள் வீண் விளம்பரம் தேடுகின்றனர் ?? தேர்தல் தேதியை மாற்றுவதால் தேர்தல் கமிஷனுக்கு என்ன நஷ்டம் வரப் போகிறதோ ?? . ஏற்கனவே தேர்தலில் ஒட்டு போட மக்களை கெஞ்சி கூத்தாடும் தேர்தல் ஆணையம் இது போன்ற திருவிழா நாட்களில் தேர்தல் நடத்துவது கேலிக்குரியதாக உள்ளது. இதே போல கிறிஸ்துமஸ், ரம்ஜான் அன்று தேர்தல் நடத்த முடியுமா?? உள்ளூர் அரசு விடுமுறை நாளில் தேர்தல் நடத்தக் கூடாது என நீதி மன்றம் ஆணையிட்டால் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வரும்.

  • Deep - Bangalore,இந்தியா

    Eventhough I appreciate EC role in Indian elections including Voting machine and VR pact etc, State Election commission are rude now. They should understand the sentiments of people over there. Changing one constituency poll doesn't impact much. Same with EC of Kerala, They are saying we should not discuss sabarimala and Ayyappan during elections. Who are they to decide what a election should discuss about. Kerala thug government can do anything against sabarimala but people should discuss it. Same with Madurai Election case.

  • ஆப்பு -

    வெளங்கிரும்...சபரிமலை தீர்ப்பு மாதிரியே இதுவும்.

  • karutthu - nainital,இந்தியா

    தமிழக தலைமை செயலாளர் கஜா புயல் பாதிப்பு உள்ளது என்று தேர்தலே தள்ளிவைத்தார்கள் .அதே போல சித்திரை திருவிழா நடப்பதை கரணம் காட்டி தமிழ் நாடு தேர்தலையும் அடுத்த கட்டத்தில் நடத்த அவர்கள் தேர்தல் கமிசனிடம் எடுத்து கூறி இருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காதே கள்ள ஓட்டு நிறைய விழும் .

  • RajanRajan - kerala,இந்தியா

    முதலில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா ஆவதை தடுக்கிற வகையில் உருப்படியா ஏதாச்சும் பண்ண முடியுமா என்று பாருங்க சாமிகளா. ஜனநாயகம் என்ற பெயரில் தேர்தலில் இருந்த தான் லஞ்சம் துவங்குகிறது எனும் கால ஓட்டத்தை உங்களால் மாற்ற முடியுமா என்று வழி தேடுங்கள். நிச்சயமாக இது முடியும். ஆனால் யாரும் செய்ய முன் வர மாட்டார்கள். ஏன்? சட்டத்தில் அத்தனை ஓட்டைகள் உள்ளன. யார் டிங்கரிங் ஒர்க் பண்ணணுமாம் சாமி?

  • sampath, k - HOSUR,இந்தியா

    Election commission officers are adamant in this issue. Change of date is easy to the election commission at this initial stage. Welfare of the people is absolutely required apart from their cooperation.

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    People and the Courts must understand the difficulties of Election Commission. Every State in every day there are some functions and asking for change is not correct.If you accept for one Constituency many will follow for a change in Date. Once we say that Election Commission is responsible for conducting the election in a democratic way we must give them the authority to abide by their dates. The Courts must not encourage the date shift in election.

  • Mano - Dammam,சவுதி அரேபியா

    பிரசித்திபெற்ற திருவிழா அன்று, எப்படி வாக்களிக்க மக்கள் வருவார்கள். நீதி அரசர் சொல்லியதுபோல் வாக்குச்சாவடி இருக்கும் ஆனா ........ வாக்காளர்கள் வரமாட்டார்கள்.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    சித்திரை திருவிழா மதுரைக்கு மட்டுமல்ல தென் மாவட்டங்களுக்கே முக்கியமானதாகும். அது சமயம் சுமார் பத்து லட்சம் மக்கள் மதுரையில் கூடுவார்கள். குறிப்பாக திருக்கல்யாணம், எதிர் சேவை மற்றும் தேர் அன்று சுமார் ஐந்து லட்சம் மக்கள் கூடுவது வழக்கம். மதுரையோ மாநகராட்சியானாலும் குறுகலான தெருக்கள் கொண்ட ஊர். வாக்கு சாவடிகள் இருந்தாலும் மக்கள் வாக்களிப்பது கடினம். யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் செய்த தவறை திருத்திக்கொள்ளமாட்டோம் என்ற பிடிவாதத்தில் தேர்தல் கமிஷன் இயங்குகிறது. ஒருவேளை மேலிடத்து உத்தரவோ என்றும் சந்தேகமாக இருக்கிறது.

  • Sudarsanr - Muscat,ஓமன்

    விழா நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால் இதற்காக மாற்றினால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும்..பின்பு வேறு சமயம் வேறு சிலர் தங்களின் சொந்த வெறுப்பு விருப்புகளுக்காக தேர்தலை தள்ளி வைக்க சொல்லி போராடுவர்.. அல்லது இப்பொது போல் தேவை இல்லாம வழக்கு தொடர்வார்... அதனால் நீதிமன்றம் நிர்வாக விஷயங்களில் தலையிடாமல் அதன் தன்னாட்சி அதிகாரத்தை காப்பாற்றவேண்டும். இப்படியே போனால் எல்லா நிர்வாக விஷயங்களிலும் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிவிடும்... தேர்தல் காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகும். மாலை ஐந்து மணிக்கு முடியும் . அவ்வளவு நேரம் என்ன தேர் திருவிழா நடைபெறுமா...சட்டம் அனைவர்க்கும் பொதுவானது... இப்பொது இதற்காக மாற்றினால் அது தவறானது என்று பின்னாளில் உணரவேண்டி வரும்... (பின் kurippu naan muzhu ஆத்திகன்.. கடவுள் நம்பிக்கை miga athigam உள்ளவன்)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Very good and concreat action by Madhuri High court Needhi Arasargal and their concerns about Valuable Voters.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    மே 18 க்கு தேர்தலை ஒத்தி வைக்கலாம். தமிழ் நாட்லே ஒரு பய இருக்க மாட்டான். தண்ணி இல்லாம தமிழ் நாடே சுடுகாடு ஆக இருக்கும்.

  • Jaya Ram - madurai,இந்தியா

    அப்போ அந்த தொகுதியில் கட்சி காரர்கள் ஓட்டுகள் தவிர பொது மக்கள் வோட்டு போடமாட்டார்கள் ஏனென்றால் தேரோட்டம் காலை ஆறு மணிக்கு முன்னதாகவே தொடங்கி மதியம்வரை ஆகிவிடும் பின்னர் மதியத்தில் இருந்து எதிர்சேவை தொடங்கிவிடும் பின்னர் எப்படி மக்கள் வோட்டு போட வருவார்கள் ஹய்யா ஜாலிதான் ஓட்டுப்பதிவு 25% தாண்டாது

" "
Advertisement