Advertisement

மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்

புதுடில்லி: விமானப் படை வீரர் அபிநந்தனிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவருக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாக்.கின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப். 27ல் பாக். விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாக். ராணுவத்திடம் சிக்கினர். மூன்று நாட்களுக்கு பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.


பாக். ராணுவத்தினர் அவரை நடத்திய விதம் குறித்தும் அங்கு நடந்தவை குறித்தும் விமானப் படை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாக். ராணுவம் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாக அபிநந்தன் தெரிவித்தார். அவரிடம் விபரங்கள் கேட்டறிவதை அதிகாரிகள் நேற்றுடன்( மார்ச் 14) முடித்தனர். இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

'சில வாரங்களுக்கு பின் அபிநந்தனின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டதும் அவர் எப்போது பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படும்' என விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • tamil selvam - tamilnadu,இந்தியா

  இவரை ரொம்பவே ஹிம்ஸ பண்ணிருக்கான் பாக்கிஸ்தான்காரன்.

  • VELAN S - Chennai,இந்தியா

   இவரை கிரவுண்ட் எம்பலாயியாக போட்டு பரம சக்கராவை கையில் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள் . , இவரை ஏர் மார்சல் அளவுக்கு கொண்டு வரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கு , அதை ஒழுங்கா செய்தா சரி .

 • Pon Gane - Peryakullam,இந்தியா

  அவர் ஒரு ராணுவ அதிகாரி , அவரை பற்றி ஏன் மேலும் மேலும் பொதுவெளியில் விவாதிக்கிறீர்கள் ।அது அவருடய பாதுகாப்புக்கு நல்லதல்ல। எதிரி நாட்டு இராணுவத்திடம் அவர் அவருடய சொந்த விசயத்தை சொல்லவில்லையென்று சொல்லிவிட்டு இங்கு ஊடகங்கள் அவருடய வீட்டுக்குள் வரை கேமராவை கொண்டுபோய் செய்திகளில் காடுகெறிர்கள்। நம் நாட்டுக்கு அழிவுகாலம் எதிரியால் அல்ல நம்மால் தான்। மாறுங்கள் மக்களே , மாறுங்கள் ஊடகத்துறையேயேய்

 • ஆப்பு -

  இவரால வரக்கூடிய அரசியல் ஆதாயம் குறைந்து விட்டது. இவருக்கு ஆபீசில் வேலை குடுத்து உக்காத்தி, ஒரு அசோக சக்ராவைக் குடுத்துருவாங்க. ஜை ஹிந்த்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எதற்கும் அவரை பாதுகாக்கவேண்டியது மக்களின் கடமை... அவர் ஒரு நபர்தான் பால்கோட் பற்றிய உண்மையை சொல்லமுடியும்

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  உண்மையிலேயே அவருக்கு ஓய்வு தேவை. மறுப்பிறவி எடுத்துள்ளார். தன்னை நன்றாக சுதாகரித்துக் கொண்டு மீண்டும் மகத்தான சேவை செய்ய வாழ்த்துக்கள். முன்பு போல் இல்லாமல் தற்காலங்களில் மத்திய அரசு ராணுவ அதிகாரிகளுக்கு மின் பொருள்த்துறையில் உள்ளது போல வசதிகளும் ஊதியமும் கொடுத்துள்ளதால் இவர்களின் பணிகளில் ஈடுபாடு நிறைவாகவே இருக்கும்.

" "
Advertisement