Advertisement

தீபக் தல்வாரை கைது செய்ய மனு

புதுடில்லி: வெளிநாட்டு தனியார் விமான சேவை நிறுவனத்திடம் இருந்து, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு விமானம் வாங்கிய விவகாரத்தில், மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகன், தீபக் தல்வார் என்பவனை, அமலாக்க துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த 'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, 43 விமானங்கள் வாங்கிய விவகாரத்தில், தீபக் மீது, புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தீபக்கை கைது செய்ய, உத்தரவிடும்படி, டில்லி நீதிமன்றத்தில், அமலாக்க துறை மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக, தீபக் தல்வாரை, டில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement