Advertisement

பீஹாரிலும் மெகா கூட்டணி உடைந்தது? காங்., பிடிவாதத்தால் லாலு அப்செட்'

பாட்னா: உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் 'மஹாகத்பந்தன்' என்ற மெகா கூட்டணி உடைந்துள்ள நிலையில் பீஹாரிலும் கூட்டணி அமையும் வாய்ப்பு மங்கியுள்ளது. 'தன் தகுதிக்கு மேல் காங். அதிக தொகுதிகள் கேட்பதாக' லாலு கூறியுள்ளார்.

கொடுப்பதை வாங்கிக் கொண்டால் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மஹாகத்பந்தன் என்ற மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்களான மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்தன. காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர்கள் யோசிக்கக் கூட இல்லை.

பல மாநிலங்களிலும் மாயாவதி தனியாக கூட்டணி அமைத்துள்ளார். மெகா கூட்டணிக்கு கடுமையாக போராடிய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூட ஆந்திராவில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. இதே போல மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி என ஒவ்வொரு தலைவர்களாக காங்கிரசை கழட்டி விட்டு வருகின்றனர்.


அதே நேரத்தில் பீஹாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து காங். பேசி வந்தது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் இணைந்துள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.வும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 50 : 50 விகிதத்தில் போட்டியிட இக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 தொகுதிகள் கொடுத்து தலா 17 தொகுதிகளில் போட்டியிட இவ்விரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லாலு பிரசாத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். 'தங்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என அவர்கள் ஒற்றைக் காலில் நின்றனர். 'ஆனால் 8ல் ஆரம்பித்து 10 தருகிறேன்' என லாலு கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்காமல் காங். விடாப்பிடியாக உள்ளது. அதனால் பீஹாரிலும் மெகா கூட்டணி அமையும் முயற்சி தோல்வி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர்கள் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 55 ஆண்டுகள் பீஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் 1990ல் லாலு பிரசாத் கட்சியை துவக்கிய பிறகு காங்.குக்கு சரிவு ஏற்பட்டது. சமீபத்தில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் வென்றதால் காங். மிதப்பில் உள்ளது. தங்களால் தான் மத்தியில் மாற்று அரசு ஏற்படுத்த முடியும் என பகல் கனவு கண்டு வருகிறது.


அதனால் தான் பா.ஜ. - ஐக்கிய ஜனதா தளம் போல 50 : 50 விகிதத்தில் தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டும் என முதலில் வலியுறுத்தியது. ஆனால் தங்களுடைய தகுதி தெரியாமல் காங். மனக்கோட்டை கட்டி வருகிறது. 1990களுக்குப் பிறகு தனித்து போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் 6 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளை பெற்றதில்லை. ஆனால் தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளதாக நினைத்துக் கொண்டு அதிக தொகுதிகளை கேட்கிறது.

காங்.குக்கு எட்டுத் தொகுதிகளுக்கு மேல் தருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் 10 தருவதற்கு லாலு முன் வந்துள்ளார். பீஹாரில் தன் பலம் என்ன என்பதை காங்கிரஸ் உணர வேண்டும். இதற்கு மேல் பிடிவாதம் பிடித்தால் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகாவின் ஆர்.எல்.எஸ்.பி. எனப்படும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வி.ஐ.பி. எனப்படும் விகாசில் இசான் கட்சி முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மான்ஜியின் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளன.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Rohin - jk ,இந்தியா

  ரெண்டு பிராடும் கூட்டணியா வெட்கம் வெட்கம், இப்ப லொள்ளு உள்ளே அடுத்த ELECTION ல ராவுல் உள்ளே, அடுத்த தேர்தலில் ரெண்டு பிராடும் ஜெயிலுக்கு உள்ள உக்காந்துகிட்டு கூட்டணி பேசும்

 • adalarasan - chennai,இந்தியா

  அரசாங்க கஜானாவிலிருந்து, தன சொந்த சொத்துபோல், பணத்தை, எடுத்ததற்காக, இரண்டு கேசுகளில் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கவேண்டியவர், உடல் நிலை சரியில்லை என்று வழக்கம்போல், நாடகம் ஆடி, வெளியில் உள்ளார்?இப்ப. தேர்தலில் முழுமையாக ஈடுபட , உடலில் வலு வந்திருக்குஉள்ளே போட வேண்டியது தான..?யார் கேட்கிறது..?இதே ஒரு ஆயிரம் ரூபாய், திருடிய, ஏழை,ஜாமீனில் கூட வரமுடியாமல், பல வருடங்கள், ஜெயிலி வாடுகிறான்..?இதுதான் நம் சட்டம்…?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  காங்கிரஸுக்கு பீகாரில் ஒரு தொகுதிக்குமேல் கொடுப்பதே அதிகம்தான்.

 • nandaindia - Vadodara,இந்தியா

  //நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 55 ஆண்டுகள் பீஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது// அதுதான் பிஹார் உருப்படாமல் இருப்பதன் ரகசியமோ?

 • Snake Babu - Salem,இந்தியா

  ஏற்கனவே டெல்லி, ஹரியானா, உபியில் கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் காங்கிரஸ் பீஹாரிலும் தனியாக இறங்கினால், காங்கிரஸ் தென்மாநில கட்சியாக மாறிவிடும் என்பது தான் உண்மை. அப்படி இருக்கும்போது மாநில கட்சிகள் தான் மத்தியில் ஆளும் கட்சியாக ஒருகாலத்தில் உருவாகும். தேசிய கட்சியின்றி மாநில கட்சி ஒன்று இந்தியாவை ஆண்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு மாநில கட்சியும், தங்கள் மாநிலத்திற்கு ஏதாவது செய்ய மத்திய அரசை வற்புறுத்தும். அப்படி செய்யும்போது, ஒட்டுமொத்த இந்தியா வளர்வதற்கான சாதகங்கள் உள்ளனவா? என்று ஐயமாக உள்ளது. ஏனனில், நான்கைந்து மாநிலங்களை தவிர, ஒட்டுமொத்த இந்தியா இன்னும் தமிழகத்தின் வளர்ச்சியில் பாதியை கூட எட்டவில்லை. அப்படி இருக்கும்போது, தமிழகத்திற்கு தேவையான கட்டுமான வசதிகள் செய்துகொடுத்தால் தான், தமிழகம் மேற்கொண்டு வளரமுடியும். அதன் மூலம் ஒட்டுமொத்த வறுமையான இந்தியாவிற்கு வரி என்கிற தீனி போட, தமிழகம் பத்துசதவீதம் வளர்ந்தால் தான் போடமுடியும். வடஇந்திய கட்சியான பிஜேபி தமிழகத்தை புறக்கணித்து வந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சி முக்கியம் என்பதை புரிந்தவர்கள். காங்கிரஸ் தமிழகத்தின் வளர்ச்சியை வளர்க்கும். ஆனால் மாநிலக்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மத்திய அரசை ஆண்டால், அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவை பற்றி யோசிக்காமல், தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டும் யோசிப்பார்கள். அதற்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பார்கள். அதில் தமிழகத்தின் வளர்ச்சிதான் மத்திய அரசிற்கு தீனி போடுகிறது என்று கொஞ்சம் கூட நினைப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளது.

" "
Advertisement