Advertisement

பற்றாக்குறை! ஊராட்சிகளில் குடிநீர் மோட்டார் கையிருப்பு...மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

கம்மாபுரம்:ஊராட்சிகளிலுள்ள குடிநீர் மோட்டார்கள் பழுது ஏற்பட்டால், புதிய மோட்டார் பொருத்தி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம், கம்மாபுரம், நல்லுார், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிபேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம் உட்பட 13 ஒன்றியங்களில், 683 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியிலுள்ள குடிநீர் மோட்டார் பழுது, மின்விளக்கு பொருத்துதல், பைப்லைன் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் சீரமைத்தனர். அதற்கான நிதி இரண்டு மாதங்களாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாததால், வளர்ச்சிப் பணிகள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, மாவட்டத்தில் போதிய அளவு பருவ மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், என்.எல்.சி., விரிவாக்க பணி காரணமாக நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால், கம்மாபுரம், விருத்தாசலம் பகுதியில் நாளுக்கு நாள் நீர் மட்டம் குறைகிறது.வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இந்தாண்டு கால்நடைகள் குடிநீருக்கு அல்லப்படும் நிலை உள்ளது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம்18ம் தேதி நடை பெறும் என, மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால், ஊராட்சிகளிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் போர்வெல்கள் பழுது ஏற்பட்டால், தேர்தல் முடிந்த பிறகு தான் சீரமைக்க முடியும். பெரும்பாலான ஊராட்சிகளில் மோட்டார்கள் (ஸ்ேடன்ட் பை) இருப்பு இல்லை. இதன் காரணமாக 30 நாட்கள் வரை அப்பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, ஊராட்சிகளிலுள்ள கிராம மக்களின் நலன் கருதி, குடிநீர் மோட்டார்கள் பழுது ஏற்பட்டால், புதிய மோட்டார்கள் பொருத்தி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement