Advertisement

'டவுட்' தனபாலு

பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா: தேசிய அளவில், காங்., குடும்ப அரசியல், மாநில அளவில், தி.மு.க., குடும்ப அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: பா.ஜ.,வுக்கு இணக்கமாக இல்லாத கட்சிகளின், குடும்ப அரசியலை தோற்கடிக்கணும்னு, ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுங்க... வடக்கே, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, பிரகாஷ் சிங் பாதலின் சிரோன்மணி அகாலி தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா துவங்கி, இங்கே, ராமதாசின், பா.ம.க., விஜயகாந்தின் தே.மு.தி.க., போன்ற கட்சிகளின் குடும்ப அரசியல், உங்க கண்ணுக்கு எப்படித் தெரியாமல் போச்சு என்பது தான், மக்களின், 'டவுட்!'

***

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: அ.தி.மு.க., கூட்டணி, இம்முறையும், அதிக இடங்களில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில், பெரிய கட்சியாக முத்திரை பதிக்கும்.

டவுட் தனபாலு: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, 37 எம்.பி.,க்களைப் பெற்று, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியா பெயரெடுத்தீங்க... ஆனா இப்போ, 20 தொகுதிகளிலாவது போட்டியிடுவீங்களா என்பதே, 'டவுட்'டா இருக்கு... அப்புறம் எப்படி, பெரிய கட்சி என்ற முத்திரையைப் பதிப்பீங்க...!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பா.ம.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று, லோக்சபாவுக்கு சென்றால், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், ஏராளமான உரிமைகளும், நன்மைகளும் கிடைக்கும்.

டவுட் தனபாலு: வெறும், எம்.பி.,யாக போனாலே, போதுமா... இல்லை, அமைச்சராகப் போகணுமா... ஏன் இந்த, 'டவுட்'னா, உங்க மகன் அன்புமணி, இப்பவும், எம்.பி.,யாகத் தான் இருக்காரு... ஆனா, பார்லிமென்ட்ல மிகக் குறைந்த நாட்களே பங்கெடுத்து இருக்காரு... அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியின் வெளிப்பாடு தான், இதுங்கற பேச்சு, ஊரு முழுக்க ஓடுதே... அதனால் தான், இந்த, 'டவுட்'டை கேட்டோம்...!

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
" "
Advertisement