Advertisement

தேர்தல் புகார்கள் சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும்: ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் பதிவாகும் லோக்சபா தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுடன், தமிழகத்தில், ௧௮ சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்., ௧௮ல், ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. மதுரையில், சித்திரை திருவிழா வருவதால், மதுரை லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க கோரி, உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது.


இந்நிலையில், தேர்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்கும்படி, தலைமை நீதிபதியிடம், தேர்தல் கமிஷன் சார்பில் முறையிடப்பட்டது.இதையடுத்து, தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நடந்தே அலுத்து பொய் விடுவார்கள் .

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    தேர்தல்ல இப்போதே குக்கர் தன்துண்டுருக்கானே தினகரன் அதுக்கு என்ன பதில் கிட்டும் பாத்திரப்பண்டம் காசு எதுன்னாலும் பிராடுதானுங்கோ

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பாலியல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க போட்ட அரசாணை போல இது..

" "
Advertisement