Advertisement

பரபர மோடி: விறுவிறு ஆலோசனை

புதுடில்லி: லோக்சபா தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 258 நிபுணர்களை சந்தித்து பேசி உள்ளார் பிரதமர் மோடி.
இவர்கள் அனைவருமே விளம்பரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள். வரும் தேர்தலுக்குரிய சுலோகன், 30 அல்லது 40 நொடிகளுக்குள் வீடியோ, மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்ட விபரங்கள் போன்றவற்றை இவர்கள் தயாரிக்கின்றனர்.


பா.ஜ., தலைவர்களுடனும் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்டர்நெட்டில் தனி பிளாக் துவங்கி, அதில் வாரம் ஒரு முறை எழுதவும் மோடி எண்ணி உள்ளார். ஏப்ரல் முதல் வாரம் முதல் கட்சி தொண்டர்களுடன் மோடி ஆப் மூலமும் கலந்துரையாட மோடி திட்டமிட்டுள்ளார்.தினமும் காலை 8 முதல் 8.30 மணி வரை அவர் கலந்துரையாடலாம் என தெரிகிறது. அப்புறம் தினமும் பயணம், ஒரு நாளைக்கு 2 பொதுக்கூட்டம் அன்றே டில்லிக்கு திரும்புவது என்று மோடி திட்டமிட்டு வருகிறார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (47)

  • Chris -

    Had he done something, all this is not required. under the situation, this will not help.

  • tamil - coonoor,இந்தியா

    சர்வ வல்லமை பொருந்தியவர் அவருக்கு தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை, அவர் எந்த ஒரு சாதனைகளையும் பேசுவதில்லை, வழக்கம்போல காங்கிரஸ் பாகிஸ்தான் இதே பேச்சு தான், அதுவே மிகப்பெரிய சாமர்த்தியம் தான், மக்களை என்ன செய்தார் மோடி என்று சிந்திக்க விடாமல் அவர்களை வேறு திசைக்கு திருப்புவது தான் வெற்றியின் சூத்திரம் , அதை இதுவரை மோடி சிந்தாமல் சிதறாமல் செய்து வருகிறார், அதை மீறி மக்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அதனால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடம் வேலைவாய்ப்பின்மை இது நினைவுக்கு வந்தால் பிரதமருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும், மோடி அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் அளவுக்கு யாரும் பிரச்சாரம் செய்வதில்லை

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்வு அறைக்கு செல்லும் முன்பு என்ன செய்வோம் அதைதான் அவரும் செய்கிறார்

  • RM -

    BJP earned a lot for their party during the last five years.The Govt. is being run for corporates. Modi can buy social media,software people .God save india.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இப்போ ஐ.சி.யூ வில் இருக்கும் பாஜகவை உயிர்ப்பிக்க " 258 நிபுணர்களை" கொண்டாந்துருக்காங்க.. சங்கு சத்தம் கேக்குது..

    • VIJAIAN C - ,

      Postmortem is over for Congress!!!!!😅👍👍

" "
Advertisement