Advertisement

வடக்கன் விலகல்: ராகுல் அதிர்ச்சி

புதுடில்லி: காங்., தலைவர்கள் சோனியாவுக்கும் ராகுலுக்கும் நெருக்கமானவராக இருந்த டாம் வடக்கன், பா.ஜ.,வில் ஐக்கியமானது, அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் டாம் வடக்கன். டில்லியில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் உதவியாளராகவும் காங்.,கின் செய்தி தொடர்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். சோனியா, ராகுலுக்கு நெருக்கமாக நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் சென்ற மாதத்தில் இருந்தே டாம் வடக்கன், அலைபாயும் மனதுடன் இருந்துள்ளார்.திடீரென மனது மாறி பா.ஜ.,வில் இணைந்துவிட்டார். இவர் பா.ஜ.,வில் சேர்வது கடைசி வரை யாருக்கும் தெரியாது.



வடக்கன் பா.ஜ.,வில் சேர்ந்ததை ஆமதாபாத்தில் நடந்த காங்., செயற்குழு கூட்டம் முடிந்ததுமே அறிவிக்க வைத்தார் அமித்ஷா. அப்போது தான் அந்த தகவல் காங்.,கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என அவர் நினைத்தார்.வரும் தேர்தலில் கேரளாவில் திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் வடக்கன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர் போக மேற்கு வங்கத்தில் இருந்து 2 காங்., எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் இணைவார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (34)

  • Viswanathan Visu -

    வந்த இடம் நீ நல்ல இடம். வர வேண்டும் உம்மை போன்ற தலைவர்கள்.. பாரத தேசத்தில் ஒரு குடும்ப ஆட்சி ஓழிய, எதிரி நாட்டுக்கு சரியான பதிலடி தர, தாமரை மலர ஆதரீப்பிர் பாஜகவை..

  • blocked user - blocked,மயோட்

    இராணுவத்தை கேவலப்படுத்துவது காங்கிரசுக்கு அல்வா சாப்பிடுவது போல ....

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    ஓடீ போஇட்டங்களா ஓடீ வந்துட்டங்களா

  • Darmavan - Chennai,இந்தியா

    உள்ளாள் இல்லாமல் கோட்டை அழியாது என்பது பழமொழி... .இப்போது காங்கிரஸ் உள்ளாள் பிஜேபி யில் இனி எல்லா காங்கிரஸ் உள் விஷயங்களும் பிஜேபிக்கு தெரிய வரும்.

  • Rohin - jk ,இந்தியா

    அதிர்ச்சி அல்ல பேரதிர்ச்சி போக போக வருங்காலத்தில் நீயும் உன் ஆத்தா மட்டும் தான் இருப்பிங்க, அதுக்கு இப்பவே இத்தாலிக்கு ஓடி போய்டலாம்

" "
Advertisement