Advertisement

ஓட்டுக்கு நோட்டு: ஆணையம் தமிழகம் வருகை

புதுடில்லி: தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் பண நோட்டுகள் ‛விளையாடுமே' என்ற கவலை தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளை ஆட்டிப் படைக்கிறது.

தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் தடுப்பதையும் பற்றி ஆலோசிக்க நாளை (மார்ச் 15) டில்லி ஓட்டல் அசோக்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 2014, 2016, 2018 தேர்தல்களில் பணியாற்றிய தேர்தல் பார்வையாளர்கள் ஏற்கனவே அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்ற இரண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளை கண்காணிக்க உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வர்.



இது பற்றி நமது நிருபரிடம் பேசிய அரோரா, ‛‛தமிழகத்தில் இருக்கும் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் தருவோம். விரைவில் இதற்கு ஒரு தீர்வை அறிவிப்போம்'' என்றார்.

தேர்தலில் கறுப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, பல்வேறு துறையினர் அடங்கிய புலனாய்வு குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க 2 ஓய்வு பெற்ற வங்கி தலைவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பிரசார நேரங்களில் வங்கிகளில் மொத்தமாக டெபாசிட் செய்யப்படும் பணம் பற்றி கண்காணிக்கப்படும். இதனால் 2 ஆயிரம் நோட்டின் விநியோகம் கட்டுப்படுத்தப்படும்.கார்களில் பணம் கடத்தப்படுவதை கண்டுபிடிக்க, தேர்தல் பிரசாரம் முடிந்த பின் முக்கிய மாவட்ட எல்லைகளில் வந்து செல்லும் கார்கள் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.


பணப்புழக்கத்தைக் கண்காணிக்க நேரடி வரி வாரியம் மற்றும் சுங்கம், கலால் வரி வாரியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3 பேர் அடங்கிய சிறப்பு குழு தமிழகம் வர ஒப்புக்கொண்டுள்ளது. இவர்கள் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆலோசனை நடத்துவர். சிறப்பு குழுவில் நேரடி வரி வாரிய தலைவர் பி.சி.மோடி. மறைமுக வரி வாரிய தலைவர் பிரணாப் குமார் தாஸ், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா, வருவாய் புலனாய்வு இயக்குனர் தேவி பிரசாத் தாஸ், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மிதாலி மதுஷ்மிதா, நிதிப்பிரிவு புலனாய்வு துறை தலைவர் பஞ்கஜ் குமார் மிஸ்ரா ஆகியோர் இடம் பெறுவர்.இதன் பிறகு, மேலும் புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • oce - chennai,இந்தியா

    தேர்தல் ஆணையம் தனக்கு விலை பேசிய தினகரன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது அவசியம்.

  • ஆப்பு -

    இன்னும் ஏன் பணப் பட்டுவாடா பத்தி கவலைப் படுறாங்க? அதான் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு 2000 ரூவா ஒரு ஓட்டுன்னு வங்கியில் வரவு வெச்சாச்சே. இனிமே படுத்திக் கொண்டே ஜெயிப்போம்னு போய் தூங்குங்க.

  • oce - chennai,இந்தியா

    இருபது ரூபாய் டோக்கனைப்பற்றறி இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன. இருபது ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் குறைந்துள்ளது. இருபது ரூபாய் டோக்கன்படி வாக்கு கொடுத்தவர்கள் இன்னும் எவருக்கும் பணத்தை செட்டில் செய்யவில்லை. ஓட்டளித்த மக்கள் கைகளில் இருபது ரூபாய் டோக்கன்கள். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணம் யார் கையில்.

  • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

    தமிழகம் வரப்போகிறீர்களா ........மிக அருமையான சுற்றுலா தளங்கள் இங்கு ஏராளம் ...வாழ்த்துக்கள் .

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    சொல்லிக்க வேண்டியதுதான். ஒரு தொகுதியையே (RKNagar ) நம்மால கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாம போச்சே.

" "
Advertisement