போலி மதுபான ஆலை நடத்திய 2 பேர் கைது
திருச்சி: திருச்சி, துறையூர் அருகே, புலிவலம் உடையான்பட்டியில் போலி மதுபான ஆலை இயங்கி வந்ததை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக சரத்குமார், 26, என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய, திருச்சி மேல கொண்டையம்பேட்டையச் சேர்ந்த கார்த்திக், 29, அஜய், 20, சாத்தான்குளத்தைச் சேர்ந்த ரவி, வீரன் ஆகியோரை தேடி வந்தனர். நேற்று மாலை, பெரமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த, இண்டிகா காரை சோதனையிட்டனர். போலி மதுபான ஆலை நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக், அஜய் ஆகியோர் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!