Load Image
Advertisement

ராணுவ வாகன இயக்க விதிகளில் மாற்றம்


ஜம்மு : காஷ்மீரில் ராணுவ வீரர்கள் செல்லும் வாகனங்களின் இயக்க விதிகள் இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Latest Tamil News

ராணுவ வாகனங்கள் செல்லும் போது, அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்ட நடைமுறைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சையத்தின் ஆட்சி காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது பொது மக்களை ஒடுக்கும் நடவடிக்கை எனவும், மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போதைய முப்தி முகம்மதின் கூட்டணி கட்சியும், மத்தியில் ஆட்சி செய்த கட்சியுமான காங்., விதிகளை மாற்ற ஒப்புதல் அளித்தது. இதன் பிறகு ராணுவ வாகனங்கள் செல்லும் போது, அந்த வாகனத்துடன் மற்ற வாகனங்களும் செல்லலாம் என முறை கொண்டு வரப்பட்டது.
Latest Tamil News

தற்போது புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வாகனங்கள் செல்லும் வழியில், மற்ற தனிநபர்களின் வாகனங்கள் மற்றும் பொது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் செல்லும் பாதை மூடப்பட்டு. ராணுவ வாகனங்கள் சென்ற பிறகே, அவ்வழியாக மற்ற வாகனங்கள் இயக்கப்பட்டன. ராணுவ வாகனங்கள் செல்லும் பாதையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (23)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement