Load Image
Advertisement

தயாராகிறது: கோடையை சமாளிக்க சிக்கராயபுரம் கல்குவாரி பராமரிப்பு பணிகளை துவக்கியது குடிநீர் வாரியம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர் சரிவு

 தயாராகிறது: கோடையை சமாளிக்க சிக்கராயபுரம் கல்குவாரி பராமரிப்பு பணிகளை துவக்கியது குடிநீர் வாரியம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர் சரிவு
ADVERTISEMENT
குன்றத்துார்:செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நாளுக்குநாள் சரிந்து வருவதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, சிக்கராயபுரம் கல்குவாரி நீரை பயன்படுத்தும் வகையில், வாரியம் பணிகளை துவங்கி உள்ளது.பருவமழை சரியாக பெய்யாததால், 2017ல், சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், வெகுவாக குறைந்தது.இதை கருத்தில் கொண்டும், கோடையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்கவும், மாற்று திட்டத்தை செயல்படுத்த, குடிநீர் வாரியம் முடிவு செய்தது.இதையடுத்து, மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள நீரை, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதனால், அந்த ஆண்டு குடிநீர் பிரச்னை சமாளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக, குட்டைகளில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில், எச்.பி., - டி.ஏ., என, இரண்டு வகையான குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.கல்குவாரி குட்டைகள் மேடு, பள்ளமாக இருப்பதால், எளிதில் வளையும் தன்மை கொண்ட, எச்.பி., குழாய்கள், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டன.தடுப்புகள் பொருத்தம்சமவெளி பகுதிகளில், உறுதியான, டி.ஏ., குழாய்கள் பொருத்தப்பட்டன. மேலும், குழாய்கள் அசையாமல் இருக்க, இருபுறத்திலும், இரும்பு கம்பிகளை வைத்து, கீழ்ப்பகுதியில் தடுப்புகள் பொருத்தப்பட்டன.இந்நிலையில், 2017 போன்று, கடந்த ஆண்டும், பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நாளுக்குநாள் குறைந்து வருகிறது.தற்போதுள்ள தண்ணீரை வைத்து, கோடையை சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. அதேநேரத்தில், ஏரியின் பெரும்பகுதி வறண்டுவிட்டது.இதனால், சிக்கராயபுரம் கல்குவாரி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்துவதற்கான அவசியம், இந்தாண்டும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்களை, சீரமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. பல இடங்களில், குழாய் சேதமடைந்தும், உடைந்தும் விட்டது. அவற்றை கண்டறிந்து, சீரமைக்கும் பணி நடக்கிறது.இரண்டு மாதம் குட்டைகள் மீது பொருத்தப்பட்டுள்ள குழாயில், ஓட்டை உள்ளதா என, முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. உடைந்த இடங்களில், குழாய்களை அகற்றி, புதிய குழாய் பொருத்தி, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2017ல் தண்ணீர் எடுக்கப்பட்ட குட்டையில், மீண்டும் மோட்டார் பொருத்தும் பணி, மற்றொருபுறம் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிய, இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிகிறது.இதனால், ஏப்ரல், மே மாதங்களில், கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் துவங்கும் என, வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சிக்கராயபுரம் குட்டைக்கு, உபரிநீரை எடுத்து செல்ல, வெளிவட்ட சாலையை ஒட்டி, கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை சுத்தம் செய்து, கடந்தாண்டு, உபரிநீர் விடப்பட்டது. ஒரு புறத்தில் உள்ள குட்டைகள் நிரம்பி, அருகேயுள்ள பகுதிக்குள், தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டதால் நிறுத்திவிட்டோம். அந்த தண்ணீர் தான், தற்போது உள்ளது. அனைத்து குட்டைகளையும் ஒன்றாக இணைத்தால், இன்னும் அதிக தண்ணீரை சேமிக்கலாம்.பொதுப்பணித் துறை அதிகாரிகள்நிரந்தர நீர்த்தேக்கமாக மாற்றலாம்!செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகள் இருப்பது, வரப்பிரசாதமாகும். அங்கு, தனித்தனியாக, 23 குட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றும், 400 - 500 அடி ஆழம் கொண்டவை. வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து பார்த்தால், கல்குட்டைகள் இரு பிரிவுகளாக தெரியும். இடதுபுற குட்டைகளில், எப்போதும், தண்ணீர் இருக்கும்.வலது புற குட்டைகளில், சில அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. 23 குட்டைகளை, அடியில் துளையிட்டு, ஒன்றோடு ஒன்று இணைத்து, நிரந்தர நீர்த்தேக்கமாக மாற்றலாம். இன்றைய காலகட்டத்தில், புதிய நீர்த்தேக்கம் அமைப்பது என்பது, சாதாரண விஷயமில்லை. அப்படியே முயன்றாலும், சென்னையில், அதற்கேற்ற இடவசதியும் இல்லை. ஆனால், பயன்பாட்டில் உள்ள குட்டைகளை, நீர்த்தேக்கமாக மாற்றுவதில் சிரமம் இருக்காது. நிதியும் அதிகம் தேவைப்படாது. இப்படி செய்வதால், 5 டி.எம்.சி., வரை தண்ணீர் தேக்க முடியும். இந்த தண்ணீரை வைத்து, முழுமையாக மூன்று மாதங்களுக்கு மேல், சென்னைக்கு குடிநீர் வழங்கலாம். சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டி, குட்டைகள் இருப்பது கூடுதல் சிறப்பு. இவற்றை கருத்தில் கொண்டு, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளை, நிரந்தர நீர்த்தேக்கமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.100 நாட்கள் திட்டம்!சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை, குடிநீராக பயன்படுத்த, 2017ல் திட்டமிடப்பட்டது. கிங் இன்ஸ்டிடியூட், அண்ணா பல்கலை சுற்றுச்சூழல் புவி அமைப்பியல் துறை நிபுணர்கள், தண்ணீரை ஆய்வு செய்து, குடிநீருக்கு உகந்தது என அறிக்கை அளித்தனர். இதையடுத்து, குட்டையில் இருந்து, சுத்திகரிப்பு நிலையம் வரை, ௩ கி.மீ., துாரத்திற்கு, 600 எம்.எம்.விட்டம் கொண்ட குழாய் பதிக்கப்பட்டது. இதில், 2.9 கி.மீ., துாரத்திற்கு, இரும்பு குழாயும், 300 அடி துாரத்திற்கு வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் குழாயும் அடங்கும்.இதையடுத்து, நாள் ஒன்றுக்கு, 3 கோடி லிட்டர் தண்ணீர், குட்டையில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம், 100 நாட்களில், 300 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. இதற்காக, 13 கோடியே, 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின், மழை பெய்ததால், தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement