Load Image
Advertisement

விடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு

  விடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறு
ADVERTISEMENT
குரோம்பேட்டை:பல்லாவரம் அருகே, 30 ஆண்டுகால மக்கள் போராட்டத்தின் பலனாக, கவுல்பஜார்- - கொளப்பாக்கம் இடையே, அடையாறு ஆற்றின் குறுக்கே, இருவழி மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு, ஜரூராக நடந்து வருகிறது.பல்லாவரத்தை அடுத்த கவுல்பஜாரில், கவுல்பஜார்- - கொளப்பாக்கத்தை இணைக்கும் வகையில், அடையாறு ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை, பல்லாவரம், பம்மல், பொழிச்சலுார், கவுல்பஜார், போரூர், மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இப்பாலம், ஆற்றின் தரைமட்ட அளவில் இருந்ததால், லேசான மழை பெய்தாலே, வெள்ளத்தில் மூழ்கிவிடும். அவ்வப்போது உடைந்தும் விடும். அதுபோன்ற நேரத்தில், இப்பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும்.ஒவ்வொரு மழைக்கும், இப்பிரச்னை நீடித்து வந்தது. இதனால், நிரந்தர தீர்வாக, புதிய தரைப்பாலமோ அல்லது மேம்பாலமோ கட்ட வேண்டும் என, 30 ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் போராடி வந்தனர்.இப்பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழ், தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு, பழைய தரைப்பாலத்தை இடித்து, புதிய தரைப்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இதன் மூலம், மக்களின் பிரச்னை தற்காலிகமாக தீர்க்கப்பட்டாலும், நிரந்தர தீர்வாக, மேம்பாலம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையும், பாலம் கட்டுவது தொடர்பாக ஆலோசித்தது.அதன்படி, தரைப்பாலத்தை ஒட்டி, கவுல்பஜார் - கொளப்பாக்கத்தை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இப்பணி, வேகமாக நடந்து வருவதால், திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு மத்தியில் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பொதுமக்களின், 30 ஆண்டுகால கனவு நிறைவேறி உள்ளது.இங்கு, மேம்பாலம் கட்ட வேண்டும் என, போராடி வந்தோம். ஒவ்வொரு மழைக்கும், தரைப்பாலம் மூழ்கிவிடும். சில நேரங்களில் உடைந்துவிடும். அப்போதெல்லாம், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும், எங்கள் பிள்ளைகள் சிரமப்படுவர். தினக்கூலி தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மழைவிட்ட பிறகு கூட, இந்த நிலை நீடிக்கும். தற்போது, மேம்பாலம் கட்டுவதால், பிரச்னை இருக்காது. கடும் மழை பெய்தால் கூட, நிம்மதியாக சென்று வரலாம்.கொளப்பாக்கம் பகுதி மக்கள்இருவழி மேம்பாலம்!அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலம், இருவழிப்பாதை கொண்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு, 5.93 கோடி ரூபாய். மேம்பாலத்தின் நீளம், 580 அடி; அகலம், 40 அடி. உயரம், அடையாற்றில் இருந்து, 28 அடி. ஓராண்டிற்குள் பணி முடிக்க வேண்டும். இதில், ஏழு துாண்கள் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. நவம்பரில் பாலம் திறக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.தரைப்பாலம் என்னாகும்?கடந்தாண்டு, 58 லட்சம் ரூபாய் மதிப்பில், இங்கு தரைப்பாலம் கட்டப்பட்டது. மொத்தம், 12 அடி அகலம், 250 அடி நீளம் கொண்ட, ஒரு வழிப்பாதையான இந்த தரைப்பாலத்தை, தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், தரைப்பாலத்தின் நிலை என்னவாகும் என தெரியவில்லை.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement