Load Image
Advertisement

ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சி டிஜிட்டல் டீம் சார்பில், அறிவியல் மாதிரிகளை செய்வது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.காஞ்சிபுரம் ஒன்றியத்தில், ஆசிரியர்கள் இணைந்து, 'காஞ்சி டிஜிட்டல் டீம்' என்ற குழுவை நடத்தி வருகின்றனர். தேசிய அறிவியல் தினமான பிப்., 28ல், பள்ளிகளில் அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, டிஜிட்டல் டீம் சார்பில், அறிவியல் மாதிரிகளை கற்றுக்கொள்ள, ஒரு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மேல்பிள்ளையார் பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மற்றும் மதுராந்தகம் ஒன்றியங்களை சேர்ந்த, 15 அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அறிவியல் பாடங்களை, மாதிரிகள் மூலம் கற்பிக்க வேண்டும் என்பதால், நேற்று மாலை வரை பயிற்சி நடைபெற்றது. இதில், அறிவியல் பாடங்களில் வரும் பொருட்கள் எவ்வாறு செய்வது என்பன குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement