Advertisement

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: அகிலேஷ் புகார்

லக்னோ: அலகாபாத் பல்கலையில் நடந்த மாணவர் சங்க தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், லக்னோ விமான நிலையத்தில் தன்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாணவர் சங்க தலைவர் பதவி ஏற்புக்கு அரசு பயப்படுகிறது.இதனால், அலகாபாத் செல்வதை தடுக்கும் வகையில் என்னை தடுத்து நிறுத்தினர் என்றார். மேலும், விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேசுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரம் உ.பி., சட்டசபை மற்றும் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஆஹா என்னே ஒரு ஒற்றுமை?ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான "யோகி'யின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்க இவரின் தலைவி (?) மம்தா அளிக்கவில்லை ,அது மட்டும் நியாயம் ,இது தவறா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement