Advertisement

முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

புதுடில்லி: கோர்ட் அவமதிப்பு வழக்கில், முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மன்னிப்பு கோரினார்பீஹாரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நடந்துள்ள பாலியல் வன்முறை தொடர்பாக விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரி, ஏ.கே. சர்மாவை, இடமாற்றம் செய்ததற்கு, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த, அப்போது இடைக்கால இயக்குனராக இருந்த, நாகேஸ்வர ராவ், 'இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கனவிலும் நினைத்ததில்லை. நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்கிறேன்' என, கூறியுள்ளார்.

ஆஜர்இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேஸ்வர ராவ் கோர்ட்டில் ஆஜரானார்.சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிட்டதாவது:பல தவறுகள் நடந்துள்ளது. இதற்காக சிபிஐ சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். வேண்டுமென்றே தவறு நடக்கவில்லை. நாகேஸ்வர ராவுக்கு32 வருட அனுபவம் உள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.


ஏற்க மறுப்பு
இதன் பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் அவமதிப்பு நடந்துள்ளது. இது அவரது பணியில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும். கோர்ட் அவமதிப்பு செய்த காரணத்திற்காக நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் முழுவதும், அவர் கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45 + 7)

 • Vetri Vel - chennai,இந்தியா

  மோசடி செய்ய சொன்னார்... னு சொல்லிட வேண்டியது தானே... திருவாளர் கைத்தடி அவர்களே..

 • Arasu - Madurai,இந்தியா

  மோடியின் வலதுகை , RSS ன் இடதுகை

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  It is okay. What punishment did the S C has meted out to Prashant Bhushan, a senior advocate for contempt of S C itself. Why feather type touch ? Is it because that he is an advocate and belongs to the same legal fraternity. Or because he is son former Senior counsel in S C and was a former law minister. The actions of S C are inexplicable. Whether the S C has taken any disciplinary action against judges for giving erroneous judgements ? First let the judiciary clean itself of dead wood.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல பல்வேறு சமயங்களில் வேடிக்கையாக இருந்துள்ளன. அதே போல பல நீதிபதிகள் தங்களின் பதவிக்காலம் முடிந்ததும், பல்வேறு இடங்களில் அரசியல் சார்பு வேளைகளில் ஈடுபடுகின்றனர். இதெல்லாம் பார்த்தாலே நமக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள மதிப்புகளை குறைக்கும் செயலாக உள்ளது. இந்த இயக்குனர் என்ன மாபெரும் தவறு செய்துவிட்டார், அவருக்கு நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது, தெரிந்த்திருந்தால் அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார். வெறும் கண்டிப்புடன் விட்டுவிட்டுருந்தால் இது சரியாக இருந்திருக்கும். அதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு , கர்நாட அரசும், சரி கேரளா அரசும் சரி , அடிபணியாமல் இருக்கின்றனவே அவைகளின்மேல் நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ?

 • Muraleedharan.M - Chennai,இந்தியா

  இந்த தண்டனை கம்மி்

 • Chris -

  Pet officer of Doval. Midnight CBI officer. vetkam.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ஐயா பெரிய நாட்டாமை தப்பு தப்பா தீர்ப்பு கொடுக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? அந்த குமாரசாமிக்கு என்ன தண்டனை கொடுத்தீய /

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  ஐயா நீதிமான்களே பா சிதம்பரத்துக்கு எப்பய்யா தீர்ப்பு கொடுப்பீர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்திய பிரஜை இனியும் காலம் தாழ்த்தாதீர்கள் ஐயா.

 • GMM - KA,இந்தியா

  CBI அதிகாரி இடம் மாற்ற நீதிமன்ற ஒப்புதல் தேவை. ஆனால், முன்னாள் இயக்குனர் பெறவில்லை. முழுமை இல்லாத (செல்லாத)உத்தரவை பெற்ற அதிகாரி, சம்மந்தபட்ட துறையில் முறையீட்டு விவரம் தெரியவில்லை. நாட்டின் உயரிய புலனாய்வு பிரிவு கோர்ட் அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற கூண்டில்.

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  மூடர் கூட்டம் இதுக்கு என்ன சப்பைக்கட்டு கட்டப்போகுதோ

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   என்னதான் வரம்புமீறி நடந்தாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இதற்காக மூடர் கூட்டம் என்று சொல்வதெல்லாம் சற்று அதிகம்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   ஐயோடா நம்பர் ஒன்னு

 • Ramesh - Bangalore,இந்தியா

  SC never tries to ask on how Chaidambaram & Karthick is getting bail for last 1 year. SC does not condemn on why a CM of state is doing Drama in the name of Dharna for one IPS officer(WB - Mamata). SC does not take action on Kerala government why it was not following its order in Periyar dam....

 • Suri - Chennai,இந்தியா

  மோடியை நம்பியோருக்கு கிடைக்கும் பாவத்தின் சம்பளம்.

  • N S Sankaran - Chennai,இந்தியா

   ராகுலை நம்பியவர்களை கடவுள் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பாருங்கள்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   வருங்கால கவர்னரை குத்தம் காணாதீங்க.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நாம் நீதியுள தேசத்தில்தானிருக்கிறோம் மாதிரி சிலசமயம் ஆயிரத்தில் ஒரு நல்ல தீர்ப்புகள் வருகிறது .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  அம்புக்கு தண்டனை. எய்தவனுக்கு ஒன்றுமில்லை. இதற்குப்பெயர்தான் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அம்புக்கு ஒரு நாள் கோர்ட் தண்டனை, அபராதம் எய்தவர்கள் யாரும் இப்போது காப்பாற்ற வரவில்லையே பாவம், அரசு அதிகாரிகள்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எய்தவர்களுக்கு தேர்தல் பதில் சொல்லும்..

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மறுபடியும் கேட்கிறோம் யுவர் ஹொனோர் , இதை குற்றத்தை தானே மேற்கு வங்க கமிஷன்ரும் செய்து கொண்டு இருந்தார் அவரை மட்டும் ஏன் மென்மையாக கையாண்டீர் ???

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  தவறுகள் நடந்துள்ளது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவருக்கு தண்டனை இல்லை. தவறு நடந்தது மன்னிப்புக்கோருகிறேன் என்றவருக்கு தண்டனை. எப்படியோ இறுதியில் தண்டனை மக்களுக்கே. இந்த ஒரு லட்சம் அபராதம் அரசே கட்டிவிடும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  பதவி மோகம் படுத்தும் பாடு. பதவிக்கான நேர்மை கண்ணியம் மறந்து போட்ட ஆட்டத்தின் விளைவே இந்த மூக்கடைப்பு .

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   ஆமாம் கூடிய சீக்கிரம் உங்க பப்புவுக்கும் அதே நிலமை தான்....

 • S.Bala - tamilnadu,இந்தியா

  அப்போ உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில அரசுகளுக்கு என்ன தண்டனை ? கர்நாடக காவேரி தீர்ப்பை மதிக்கவில்லை , கேரளா முல்லைப்பெரியாறு தீர்ப்பை மதிக்கவில்லை. இதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு இல்லையா . அவர்களிடம் அபராதம் வசூலித்து தமிழக ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கரெக்ட்..

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  இப்படி அசிங்கப்படுவோம்னு தெரிஞ்சே நிர்பந்தத்தின் காரணமாக செய்த செயலாக இருக்கலாம். இன்னும் என்னென்ன மாற்றல்களை இப்படி நிர்பந்தத்தின் அடிப்படையில் செய்திருப்பாரோ. இது ஒரு படிப்பினையாக இவரது சகாக்களுக்கும் இவருக்கும் இறுக்கட்டும் .

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   பாக்க பெரியமனுஷன் மாதிரி இருக்கீங்க ஆனா பேச்சு எல்லாம் சில்லறைதனமா இருக்கே....

  • Sudarsanr - Muscat,ஓமன்

   உங்களுக்கு இப்போதான் தெரியுமா... மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  /இன்று ஒரு நாள் முழுவதும், அவர் கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்./ அப்போ இன்னைக்கு உங்களுக்கு லீவு.

 • ஆப்பு -

  ரொம்ப கடுமையா தண்டிச்சுட்டீங்க எசமான். தொழிலைக் கண்டிநியூ பண்ண அனுமதியும் குடுத்திட்டீங்க. எல்லோருக்கும் வெற்றி.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  1 லட்சம் அபராதத்தை விட ஒருநாள் சிறைவாசம் பெரியது. யாருக்காக இந்த தவறை (தவறுகளை) செய்தார்கள் என்று அனைவரும் சிந்திக்கவேண்டும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இங்கே இன்னைக்கு யாரையும் பார்க்க முடியாது.

  • தலைவா - chennai,இந்தியா

   பக்தாள் எல்லாம் பஜனைக்கு வரலாம்....

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  பிஹாரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்த பெண் குழந்தைகளை வன்புணர்வு செய்த கொடுமை சம்பந்தமாக விசாரிக்கத்தான் சிபிஐ அதிகாரியான சர்மா பணியாற்றி வந்தார், சர்மாவை சிஆர்ப் துறைக்கு மாற்றினார் நாகேஸ்வரராவ் ,ஏற்கனவே பாட்னா உயர் நீதிமன்றம் சர்மாவை இடமாற்றம் செய்யக்கூடாதென உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது ஆனால் சர்மாவை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தார் இவர் ,இதில் தான் இன்று உச்ச நீதிமன்றம் லெப்ட் ரைட்டு வாங்கி இருக்கிறது ,

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிட்டதாவது:பல தவறுகள் நடந்துள்ளது. இந்த ஒப்புதலுக்கு வெட்கப்படனும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இதே போன்ற தண்டனையை காவிரி முல்லைப்பெரியாறு வழக்குகளில் பலமுறை கோர்ட் உத்தரவுகளைமீறிய கர்நாடக கேரளா முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர்களுக்கு ஏன் அளிக்கவில்லை? அதனால் நீரின்றி பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு என்ன நட்டஈடு கொடுக்கவைத்தார்கள்? ஓய்வுபெற்ற அதிகாரிகள்தான் இளித்தவாயர்களா?

  • தலைவா - chennai,இந்தியா

   அலோக் வர்மாவை அவமானப்படுத்தியவர்கள் ...........

  • ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா

   ஆரூர் ரங் அவர்களே உங்கள் கேள்வி 200% நியாயமானதே. நீங்கள் குறிப்பிடும் அந்த பிரச்சனைகள் இரு மாநிலங்களுக்கு இடையேயானது. இந்த பிரச்சனை ஒரு தனிப்பட்ட அதிகாரியின் வரம்பிற்குட்பட்ட செயல். அதுவும் அப்போது அவர் இடைக்கால இயக்குனர் மட்டுமே. இந்த எல்லை மீறிய முடிவை எடுக்க அவருக்கு யார் அதிகாரம் தந்தது. இந்த கேள்விக்கு என்ன பதில்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   , என்ன இப்படி கேக்குறீங்க , அதுக்குவேற அவரு சம்மந்தம் இல்லாத எதையோ உலர போறாரு

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போ, என்னா நடந்திடப் போவுதுன்னு அந்த தயிரியத்தில தான் இவ்வளவு கோல்மால் செய்தாங்களா ? // கோர்ட் உத்தரவுகளை மீறிய கர்நாடக கேரளா முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர்களுக்கு ஏன் அளிக்கவில்லை? //

 • Raj -

  He should dismiss from his duty and cut his pension

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  அதிகாரிகளுக்கு மட்டுமே தண்டனை ..அவர்களை இயக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏன் தண்டனை விதிக்கப்படுவதில்லை ?

  • தலைவா - chennai,இந்தியா

   நியாயம்தான்...சட்டத்தில் இடம் இருக்கா??? என்று சரி பார்க்க வேண்டும்தான்.

 • Darmavan - Chennai,இந்தியா

  கோர்ட்டிலேயே நியாயமில்லை

  • bugindia - ,

   super sir.. yenakku high BP normal range ku varave mattingadhu. 😕😭😢😭

மன்னிப்பு கேட்டார் ராவ்! (7)

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  யாரை காப்பாத்த செய்ததுன்னு கேட்டிருக்கனும் ?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  எச்சூஸ்மீ மை லார்ட்...நானா செஞ்சேன்.???.. எஜமானங்க சொன்னதை கண்ணைமூடிக்கிட்டு செஞ்சப்போ நடந்துடுத்து... சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அதுயாரு அந்த எசமான் ? அவனை காப்பாத்துனத்துக்கு ஒருநாள் கவர்னர் போஸ்டு கிடைக்குமா ?

 • makkal neethi - sel,இந்தியா

  விதியை மீறியதற்கு தண்டனை இல்லையா? இல்லை இவர் தேச பக்த கூட்டத்தில் உறுப்பினர் என்பதாலா

 • ஆப்பு -

  இந்த மாதிரி சி.பி.ஐ இயக்குனரா இருக்குறதுக்கு பதிலா....

 • S.prakash - Palakkarai,இந்தியா

  கற்பழித்து விட்டேன் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்பதுபோல் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதற்கு முதலில் தண்டனை பின்பு தான் மன்னிப்பை ஏற்க வேண்டும். இல்லையென்றால் நாடு உருப்படாது.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  ///.. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கனவிலும் நினைத்ததில்லை..// நான் என்ன செய்வது யுவர் ஹானர் .. மேலிடத்து பிரஸர் ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement